இலங்கை வந்தது பாக் . அணி
இலங்கை அணியுடன் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றி விளையாடுவதற்காக பகிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, இரண்டு இருபதுக்கு -20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதில் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி லாகூரில் கடந்த 8 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணி லாகூரில் இருந்து இலங்கை வந்தடைந்துள்ளது.
பாகிஸ்தான் அணியுடன் துணை பயிற்சியாளர் மற்றும் தலைமை பயிற்சியாளர் வாக்கார் யூனிஸ் ஆகியோர் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி விபரம் வருமாறு,
மிஸ்பா-உல்-ஹக் (அணித்தலைவர்), அசார் அலி (துணை அணித்தலைவர்), அகமது சிக்ஹாட், ஷபிக், எஹ்சான் அடில், ஹரிஸ் சொஹைல், இம்ரான் கான், ஜூனைட் கான், முகமது ஹபீஸ், சர்பிராஸ் அகமது (விக்கெட் காப்பாளர் ), ஷான் மசூட், வஹாப் ரியாஸ், யாசிர் ஷா, யூனிஸ் கான், சுல்பிக்கார் பாபர்.
இலங்கை வந்தது பாக் . அணி
Reviewed by Author
on
June 10, 2015
Rating:

No comments:
Post a Comment