திருமலையில் முக்கிய கூட்டத்தில் தமிழரசு கட்சி வாழ்வா..? சாவா..? முடிவா..?
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திருகோணமலையில் நடைபெறுகிறது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் அரசியல் பீடத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இதில் கொழும்பு, வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் தொடர்பான கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த கூட்டம் இன்று நடத்தப்படுகிறது.
வழமையான கூட்டமா என்னும் ஐயம் பலரிடமும் உள்ளது காரணம் வழமையாக கூட்டம் கூடினால் சண்டையும், சாப்பாடும் தான், இம்முறை சரியாக கூட்டம் நடக்குமா..? அல்லது ஆயுதக் குழுக்கழுக்கு அடி பணியுமா..? எனும் அச்சம் பலரிடமும் உள்ளது.
அப்படி ஆயுதக் குழுவுக்கு தமிழரசுக் கட்சி அடி பணிந்து அவர்கள் கேட்கும் ஆசனங்களை வழங்குவார்களாக இருந்தால். அது தமிழரசுக் கட்சிக்கு சாபம்.
கிழக்கில் துரைராஜசசிங்கம் ஆயுதக் கூழுவுடன் கூடித்தனம் நடத்தி தமிழரசுக் கட்சியின் மதிப்பை அழித்தது போன்று வடக்கிலும் ஆயுதக் குழுவிடம் பெரும் தொகை கள்ளப்பணத்தை வாங்கி ஆசனத்தை கொடுத்து கட்சியை ஆழித்து விடுவார்களா..? என வவுனியா தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.
திருமலையில் முக்கிய கூட்டத்தில் தமிழரசு கட்சி வாழ்வா..? சாவா..? முடிவா..?
Reviewed by Author
on
June 27, 2015
Rating:

No comments:
Post a Comment