போலி விசா ஸ்டிக்கர்களுடன் பெண்கள் உட்பட மூவர் கைது
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றும் நோக்கில் போலி விசா ஸ்டிக்கர்களை வைத்திருந்ததற்காக சந்தேக நபர் ஒருவரும் இரண்டு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (25) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர் பொரளையை சேர்ந்த 69 வயதுடையவர் எனவும், பெண் சந்தேக நபர்கள் 26 மற்றும் 68 வயதுடை கோனகங்ஹார மற்றும் பொரளையை வசிப்பிடமாக கொண்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தார்.
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பெண் சந்தேக நபர் ஒருவர் ரூ. 3,831,000 மற்றும் ரூ. 3,436,000 மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர்கள் இதுபோன்ற பிற குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment