அண்மைய செய்திகள்

recent
-

புத்தளத்தில் பாடசாலை மாணவி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் மூவர் கைது


புத்தளம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் காதலர் எனக் கூறப்படும் நபர் சிறுமியை தென்னந்தோப்பொன்றிற்கு அழைத்துச் சென்று கடந்த 5 ஆம் திகதி அவரை வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மேலும் இரண்டு இளைஞர்கள் மாணவி வன்புணர்விற்கு உட்படுத்தப்படுவதை கையடக்கத் தொலைபேசி மூலம் பதிவுசெய்துள்ளதாகக் கூறி அவரை அச்சுறுத்தி மீண்டும் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவி ஒருவரே கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
புத்தளத்தில் பாடசாலை மாணவி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் மூவர் கைது Reviewed by NEWMANNAR on June 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.