இந்து சம்மேளனத் தலைவருக்கு ஆதரவாக பொதுபல சேனா அறிக்கை
இலங்கை இந்து சம்மேளனத் தலைவர் என்.அருண்காந்திகவின் வீட்டின் மீது 2015ஆம் ஆண்டு ஜும் மாதம் 6ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொதுபல சேனா அமைப்பு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானே இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,
ஹேவாஹெட்ட, ரஹதுன்கொடவில் அமைந்துள்ள இலங்கை இந்து சம்மேளனத் தலைவர் என்.அருண்காந்திகவின் வீட்டின் மீது 2015ஆம் ஆண்டு ஜும் மாதம் 6ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொதுபல சேனா அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
கடும்போக்குவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒற்றுமைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்து சம்மேளனத்தின் தலைவரது வீடு தாக்கப்பட்டமை குறித்து பொதுபல சேனா அமைப்பிற்கு வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்து சம்மேளனத்திற்கும், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரினால் தங்கள் வருத்தத்தினை வெளியிட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அவரது பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், இத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களை கண்டு பிடித்து முறையான தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் மற்றும் பொலிஸாரிடம் கேட்டுக்கொள்வதாக அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது,
இந்து சம்மேளனத் தலைவருக்கு ஆதரவாக பொதுபல சேனா அறிக்கை
Reviewed by NEWMANNAR
on
June 11, 2015
Rating:

No comments:
Post a Comment