வவுனியா, புத்தளம் பகுதிகளிலுள்ள கோயில்கள் உடைக்கப்பட்டு கொள்ளை
வவுனியாவிலும் புத்தளத்திலும் இரண்டு கோயில்கள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் நகை கொள்ளையிடப்பட்டுள்ளன.
வவுனியா பூந்தோட்டம் ஶ்ரீ நரசிம்மர் ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு நகைகள், வௌ்ளிக் கவசம், பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளன.
மூலஸ்தான விக்கிரகத்திற்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
வவுனியா பூந்தோட்டம் ஶ்ரீ நரசிம்மர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவுக்கான ஏற்பாட்டுப் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, புத்தளம் உடப்பு செல்வபுரம் நாகதம்பிரான் ஆலயம் இன்று (16) அதிகாலை அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை ஆலயத்தில் நடை திறப்பதற்காக சென்ற குருக்கள் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நிருவாகத்தினருக்கு அறிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் ஆலயத்தின் பிரதான கதவு மற்றும் மூலஸ்தான கதவு ஆகியவற்றை உடைத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
மூலஸ்தானத்தில் உள்ள விக்கிரகத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த நகை மற்றும் விக்கிரகத்திற்குகீழ் வைக்கப்பட்டிருந்த தங்க தகடு ஆகியனவும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக முந்தல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோயில்கள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டிருந்தன.
வவுனியா, புத்தளம் பகுதிகளிலுள்ள கோயில்கள் உடைக்கப்பட்டு கொள்ளை
Reviewed by NEWMANNAR
on
June 16, 2015
Rating:

No comments:
Post a Comment