இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்துவதை ஏற்க முடியாது: ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எவ்வாறானதொரு சூழ்நிலையிலும் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுக்கும் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையிலேயே தற்போதைய அரசாங்கத்திடமும் அதனை கோருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்திலும் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு எதிராக மரண தண்டனை அமுல்படுத்தப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இதேவேளை, ஏற்கனவே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் மரண தண்டனையை அமுல்படுத்த தயங்கப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.
இலங்கையில், மிக நீண்ட காலமாக மரண தண்டனை நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், நாட்டில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் பாலியல் குற்றச்செயல்கள் மற்றும் கடத்தல்களை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர் ஆகியோர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்துவதை ஏற்க முடியாது: ஐரோப்பிய ஒன்றியம்
Reviewed by Author
on
June 03, 2015
Rating:
Reviewed by Author
on
June 03, 2015
Rating:

No comments:
Post a Comment