அண்மைய செய்திகள்

recent
-

தேசிய, சர்வதேச தேவைகளை இனங்கண்டு கல்விக் கொள்கைகளை விருத்தி செய்ய வேண்டும்: ஜனாதிபதி


நாட்டின் கல்விக் கொள்கை தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று காலை தேசிய கல்வி ஆணைக்குழு உத்தியோகத்தர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கையினால் பாடசாலைகளில் தொழில்நுட்ப பாடங்களை கற்பிப்பதனை ஊக்குவிப்பது போன்று இனங்களுக்கிடையே நல்லுறவினை விருத்தி செய்யும் அடிப்படை தேவையான தொடர்பு சாதன திறமைகளை விருத்தி செய்யும் நோக்குடன் மொழிப் பாடங்களை கற்பிப்பதும் விருத்தி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழியும் தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியும் கற்பிப்பதில் தற்போதைய நிலைமையைவிட மேலும் பலமான வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய கல்வி ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் ஆணைக்குழுவில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளைப் போன்று எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் ஜயதிலக்க, உட்பட ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய, சர்வதேச தேவைகளை இனங்கண்டு கல்விக் கொள்கைகளை விருத்தி செய்ய வேண்டும்: ஜனாதிபதி Reviewed by Author on June 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.