2 மகள்களை கற்பழித்து எய்ட்ஸ் நோயை பரப்பிய கொடூர தந்தை: கடுமையான தண்டனை கிடைக்குமா?
பிரித்தானியாவில் இரண்டு மகள்களை கற்பழித்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு வேண்டுமென்றே எய்ட்ஸ் நோயை பரப்பிய தந்தையின் கொடூர செயல் பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் நகரில் தாயார் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.
மகள்கள் இருவரும் சிறு குழந்தைகளாக இருந்தபோது அவர்களது தந்தை அவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
மகள்கள் இருவருக்கும் 14 மற்றும் 11 வயது ஆனபோது, தாயார் வேறொரு நபரை தனக்கு கணவராக அழைத்து வந்து மகள்கள் இருவருடன் வசித்து வந்துள்ளார்.
ஆரம்பத்தில் நல்ல தந்தையாக பழகி வந்த நபர், பின்னர் 14 வயது நிரம்பிய மகளிடம் பாலியல் ரீதியாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
சில நாட்கள் தொடர்ந்த நிலையில், தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில் 14 வயது மகளை தந்தை ஸ்த்தானத்தில் இருந்த அந்த நபர் கற்பழித்துள்ளார்.
அந்த நபர் சிறுமியை தன்னுடைய அறையிலேயே தங்குமாறு மிரட்டி பணியவைத்ததோடு, மகளுக்கு மோதிரம் ஒன்றை பரிசளித்து தனது மனைவியாகவே அவரை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.
தாயாரிடம் இதுகுறித்து எதுவும் தெரிவிக்காத அந்த சிறுமி, தனது தங்கையை அந்த நபரிடமிருந்தது காப்பாற்ற வேண்டும் என்றும் பல வகைகளில் முயற்சி செய்துள்ளார்.
ஆனால், தாயாரும் மூத்த மகளும் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது தங்கையையும் அந்த நபர் கற்பழித்துள்ளார்.
இதனை தாயாரிடம் தெரிவிக்கையில் அவர் நம்ப மறுத்துள்ளார்.
இந்நிலையில், மூத்த மகள் 13 வயதில் கர்ப்பம் அடைந்த நேரத்தில், அந்த நபர் சிறுமிக்கு ரகசியமாக கருக்கலைப்பு செய்துள்ளார்.
ஒரே வீட்டில் தங்கியிருந்ததால், சகோதரிகள் இருவரையும் அந்த நபர் தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளார்.
இதனால், மூத்த மகள் மீண்டும் கர்ப்பம் அடைந்த நேரத்தில் அதனை பரிசோதனை செய்தபோது மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி அவருக்கு கிடைத்துள்ளது.
தாயாருக்கு கணவராக வந்த அந்த நபர் ஏற்கனவே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் இதனை தெரிந்தே தன்னை கற்பழித்துள்ளதும், அந்த கொடிய வியாதி தற்போது தனக்கு தொற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனை அறிந்து மிகுந்த சோகத்தில் ஆழ்ந்த அவர் தனது தங்கையையும் பரிசோதனை செய்ததில் அவருக்கும் எய்ட்ஸ் நோய் தாக்கியிருந்தது தெரிந்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
2006ம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த நபர் தற்போது நீதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது 22 வயதாகும் மூத்த மகளுக்கு அந்த நபரால் ஒரு குழந்தையும் பிறந்திருக்கிறது. மகனிற்கு எய்ட்ஸ் நோய் பாதிக்கவில்லை என்பதால், அறுவை சிகிச்சை மூலமே அவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பல வருடங்களாக தன்னையும் தனது தங்கையையும் சீரழித்து வந்த நபருக்கு எந்த தண்டனை கிடைத்தாலும், தங்களுக்கு எய்ட்ஸ் நோயால் கிடைத்த தண்டனையை விட கொடூரமாக இருக்காது என வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று Canterbury Crown நீதிமன்றத்திற்கு வந்தபோது, 13 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை கற்பழித்து எய்ட்ஸ் நோயை பரப்பிய குற்றங்களுக்காக கடுமையான தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ஒத்தி வைத்துள்ளதால், குற்றவாளிக்கான தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 மகள்களை கற்பழித்து எய்ட்ஸ் நோயை பரப்பிய கொடூர தந்தை: கடுமையான தண்டனை கிடைக்குமா?
Reviewed by Author
on
June 14, 2015
Rating:

No comments:
Post a Comment