அண்மைய செய்திகள்

recent
-

கோலாகலமாக நடைபெற்ற மகாராணியின் பிறந்தநாள் விழா: அனைவரின் கவனத்தையும் ஈர்த்த குட்டி இளவரசர் ஜார்ஜ்


பிரித்தானியாவில் நடைபெற்ற எலிசபெத் மகாராணியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட இளவரசர் ஜார்ஜ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்

பிரித்தானியாவின் பக்கிங்கம் அரண்மனையில் எலிசபெத் மகாராணியின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றன. இதை காண்பதற்காக ராஜ குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அரண்மனையின் முகப்பில் கூடினர்.

குட்டி இளவரசி சார்லட் எலிசபெத் டயானா  பிறந்ததுக்கு பிறகு இளவரசி கேட் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.

ஆனால் மற்றவர்களை விட குட்டி இளவரசர் ஜார்ஜ் விழாவை காணவந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்

 விழாவில் நீல நிறத்தில், அவர் அணிந்திருந்த உடை 31 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது தந்தை வில்லியம்ஸ் அணிந்திருந்ததை போலவே இருந்தது.

மேலும் அவரது செய்கைகள் அங்கிருந்த அனவரையும் கவர்ந்தது. குடும்பத்துடன் இளவரசர் ஜார்ஜ் கலந்துகொள்ளும் முதல் அரச விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ராணுவ அணுவகுப்பை காரில் இருந்த பார்வையிட்ட எலிசபெத் மகாராணி பின்னர் பக்கிங்கம் அரண்மனையில் முகப்பிற்கு சென்று விழாவை பார்த்து ரசித்தார்.

விழாவில் கண்ணை கவரும் வகையில் வண்ண புகைகள் மூலம் விமான சாகசங்கள் நடைபெற்றன.

விழாவில் அரச குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் ,அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக ஏராளமான மக்கள் பக்கிங்கம் அரண்மனையில் திரண்டனர்.





கோலாகலமாக நடைபெற்ற மகாராணியின் பிறந்தநாள் விழா: அனைவரின் கவனத்தையும் ஈர்த்த குட்டி இளவரசர் ஜார்ஜ் Reviewed by Author on June 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.