சச்சினின் சாதனையை முறியடித்தார் குக்
டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் 9ஆயிரம் ஓட்டங்களைப் பெற்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அலெஸ்டயர் குக் முறியடித்தார்.
ஹெடிங்லீயில் நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் 30 வயது 159 நாட்களில் அலெஸ்டயர் குக் 9 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தார்.
சச்சின் இந்த சாதனையை 30 வயது 253 நாட்களில் படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை குக் 94 நாட்களுக்கு முன்னதாகவே முறியடித்துள்ளார்.
31 வயதுக்கு முன்பாகவே டெஸ்டில் 9,000 ஓட்டங்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் குக் ஆகியோர்தான் உள்ளனர்.
மேலும் 204 இன்னிங்ஸ்களில் 9,000 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் குறைந்த இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டிய வீரர்கள் பட்டியலில் குக் 10ஆவது இடத்தில் உள்ளார்.
சச்சினின் சாதனையை முறியடித்தார் குக்
Reviewed by Author
on
June 06, 2015
Rating:

No comments:
Post a Comment