மேல்மாகாணத்திலுள்ள 22 பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை
மேல்மாகாணத்திலுள்ள 22 பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை வழங்குவதற்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான இறுதி தினம் நாளை (13) என்பதால், நகர் பகுதியில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலால் மாணவர்கள் எதிர்நோக்க கூடிய அசளகரியங்களை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஶ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலையத்தில் 04 பாடசாலைகளுக்கும், கம்பஹா நகரில் 14 பாடசாலைகளுக்கும், களுத்துறை நகரில் 05 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் விமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணத்திலுள்ள 22 பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை
Reviewed by NEWMANNAR
on
July 12, 2015
Rating:

No comments:
Post a Comment