தள்ளாடி-திருக்கேதீஸ்வரம் பிரதான வீதி விபத்தில் இருவர் காயம்-Photos
தள்ளாடி-திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை(18) மதியம் இடம் பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலைக்குச் சொந்தமான கழிவு அகற்றும் பௌசர் வாகனமே விபத்திற்குள்ளாகியுள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து கழிவுகளை நிறப்பிக்ககொண்டு தள்ளாடி வீதியூடாக சென்று கொண்டிருந்த போது தள்ளாடி-திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் குறித்த பௌசர் வாகனம் வேகக் கட்டுப்பட்டை இழந்த நிலையில் வீதியோரமாக குடை சாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன் போது குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மன்னார் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தள்ளாடி-திருக்கேதீஸ்வரம் பிரதான வீதி விபத்தில் இருவர் காயம்-Photos
Reviewed by NEWMANNAR
on
July 18, 2015
Rating:
No comments:
Post a Comment