நியூ மன்னார் இணையத்தின் விம்பம் ஊடாக சைவத்தொண்டன் சமூகப்பணியாளன் 42வருட வைத்தியசேவகன் வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன் அவர்களின் அகத்திலிருந்து.
'சலரோகம்' டயபற்றிக்சை மட்டும் படி மருத்துவத்தினை முழுமையாக படித்து விடுவாய். காரணம் மனித உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களையும் தலை முதல் கால் வரை ஒன்றும் விடாமல் தாக்கி செயலிழக்கும் கொடிய நோய் 'சலரோகம்'. சலரோக நோயாளியை முழுமையாக பரிசோதிக்க வேண்டுமானால்; அனைத்து உறுப்புகளும் சரியாக வேலை செய்கின்றதா என்பதையும் பரிசோதிக்க வேண்டிய தேவை உள்ளது. சலரோகத்தை பற்றி படிக்கின்ற பொழுது எல்லா நோய்களையும் பற்றி ஒரு பரிபூரண மருத்துவ அறிவு பெற்றுக்; கொள்ளக்கூடியதாக
இருக்கின்றது.
நான் பிறப்பு இறப்பு பதிவாளராக கடமையாற்றி வருகின்ற வேளையில் மாவட்ட வைத்தியசாலையில் இருந்து வருகின்ற இறப்பு சான்றிதழ்களில் இறப்புக்கான காரணத்தை குறிப்பிடும் போது சலரோக நோயினால் சகல உறுப்புகளும் செயலிழந்ததினால் ஏற்பட்ட மரணம் என்ற காரணத்தை பார்க்கும் போது 1969ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் வரகுணம் என்பவருடைய கூற்று எவ்வளவு யதார்த்த பூர்வமாக உள்ளது என்பதை அனுபவபூர்வமாக அறியக்கூடியதாக உள்ளது. மன்னார் இணையத்தின் விம்பம் ஊடாக சைவத்தொண்டன் சமூகப்பணியாளன் 42வருட வைத்தியசேவகன் வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன் அவர்களின் அகத்திலிருந்து.
********
எனது தந்தை கணபதிப்பிள்ளை முருகேசு தமிழ் ஆசிரியர் தாய் நாகரெத்தினம். அம்மாவிலும் பார்க்க அப்பாவுக்குத்தான்; தனது மகன் வைத்தியராக வந்து சேவை செய்ய வேண்டும் என பெரும் விருப்பம் கொண்டிருந்தார். எனது அப்பா தமிழ் ஆசிரியர் என்பதால் ஒரு சொல்லுக்கு 30,40க்கு மேற்பட்ட பொருள் உள்ள நிகண்டு எனும் நூலை பாடமாக்கச் சொல்லி கேட்பார். நானும் பாடமாக்கி சொன்னேன். இப்போதுள்ளவர்களுக்கு நிகண்டு நூல் பற்றி...தெரியுமோ...! தெரியாது. நான் தெரிவு செய்த மருத்துவத்துறைக்கு தொடர்பு இல்லாத போதும் எனது தமிழ் பற்றும்,இலக்கிய பற்றும்; தந்தையின் விருப்பத்தினாலும் உருவாக்கம் பெற்றது.
யாழ்மணிக்கூட்டு கோபுர வீதியில் உள்ள எனது வீட்டின் முன்னால் உள்ள சன்மார்க்கபோதனா பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்றேன். அப்பாடசாலையில்; 05ம் தரம் வரையில்தான் உள்ளது. வகுப்பில் தொடர்ச்சியாக முதல் மாணவனாக வரும் வாய்ப்பை இறைவன் எனக்கு கொடுத்திருந்தார். அந்த பாடசாலை அதிபர் மிக அன்பான நல்ல குருவாக இருந்தார். யாழ் மத்திய கல்லூரியில் அப்போது அனுமதி எடுப்பது என்பது குதிரைக்கொம்புக்கு ஒப்பானது. அந்த காலகட்டத்தில் நான் கல்வி கற்ற கல்லூரி அதிபர்இ நீ நன்றாக கல்வி கற்கக்கூடியவன் நல்ல கல்லூரியில் நன்றாக கல்வி கற்றால் உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று கூறி என்னை அழைத்து சென்று யாழ் மத்திய கல்லூரி அதிபருக்கு நான் ஒரு புதையலை கொண்டு வந்திருக்கிறேன் என்று அறிமுகப்படுத்தி என்னை சிபாரிசு செய்துஇஇவன் உங்கள் கல்லூரிக்கு மிக பெரிய சொத்தாக இருப்பான் என்று கூறி அக்கல்லூரியில் சேரும் அனுமதியும் பெற்று தந்தார்.
யாழ் மத்திய கல்லூரி அப்போது அமெரிக்க மிசனால் நடாத்தப்பட்டது.
சிமித் என்ற பிரிட்டிஸ் நாட்டு ஆங்கிலேயர் ஒருவர்தான் அதிபராக இருந்தார். தமிழ்மொழி தவிர ஏனைய பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. நான் ஆங்கிலத்திலேயே சகல பாடங்களையும் கல்வி கற்ற போதும் எனது தந்தையார் ஊட்டி வளர்த்த தமிழ் இலக்கிய ஆர்வம் நெஞ்சுக்குள்ளேயே இருந்தது. நாங்கள் இருந்த வகுப்பறைகள் அரை சுவராக அடைக்கப்பட்டிருந்தது. பக்கத்து வகுப்பில் ளுளுஊ இலக்கிய வகுப்பு நடாத்தும் பெருத்த சரீரமும்இ நல்ல இனிய குரல் வளமுடைய மாணவர்களால் சூட்டப்பட்ட சாக்கர் என்ற பட்டப்பெயரையும் கொண்ட ஆசிரியர் கும்பகர்ணவதை படலத்தை பற்றி கம்பராமாயணம் பாடல்களை தனது இனிய குரல்வளத்தால் பாடி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தக்கொண்டிருந்தார். இந்த குரல் அவர் வகுப்பு நடாத்தும் மாணவர்களுக்கு மட்டுமல்ல வேறு நான்கு வகுப்புகளுக்கு பரவி அந்த மாணவர்களையும் வசீகரிக்கும். எங்களுடைய வகுப்பில் கணித ஆசிரியர் வகுப்புகள் நடாத்திக்கொண்டிருந்தார். பக்கத்து அறையில் முதல்நாள் போரால் இராவணன் இராமனுடன் போர் செய்து எல்லாவற்றையும் இழந்து தன்னுடைய அரண்மனைக்கு திரும்பி போனதை பற்றி விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார். நான் கணித வகுப்பை கவனிக்காமல் அடுத்த வகுப்பில் நடந்த இலக்கிய பேருரையை உன்னிப்பாக கேட்டு ரசித்து கொண்டிருந்தேன். இதை எனது ஆசிரியர் கவனித்து விட்டார்.
என்னை எழும்பி நிற்க சொல்லி கட்டளை இட்டார். கணிதத்தில் ஏதோ கேள்வி கேட்க போகின்றார் என நான் நினைத்தேன். அவர் கேட்டார் இராவணன் என்னவற்றை எல்லாம் இழந்து விட்டு சென்றான் என்ற கேள்வியை கேட்டார். அந்த கேள்விக்கு பதில் சொல்ல கூடாது என்பதையும் மறந்து நான் அவருக்கு வாரணம்; பொருந்து மார்பும் வரையினை எடுத்த தோளும் நாரத முனிவர்கேற்ப நயம்பட உரைத்த நாவும் தார் அணி மௌளி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே பொட்டு வெறுங்கையோடு இலங்கை போனான் என்று பதில் சொன்னேன். இந்த பதிலை கேட்டு என்னுடைய சக மாணவர்கள் எல்லோரும் பெரிதாக சிரித்தார்கள்.
ஆசிரியர் பிரம்பை எடுத்துக்கொண்டு வந்து மூன்று நாள் எழும்ப முடியாத அளவிற்கு அடித்து நொறுக்கி விட்டு மூன்று நாளைக்கு இனிமேல் கணித பாட வகுப்பிற்கு வரக்கூடாது என்று கட்டளை இட்டு சென்று விட்டார். அவர் அடித்த அடியில் மூன்று நாளைக்கு கணித வகுப்பிற்கு மட்டுமல்ல வேறு எந்த வகுப்பிற்கும் போக முடியாத நிலையில் தான் இருந்தேன். மனம் ஒரு காரியத்தில் நிலைத்து விட்டால் சுற்றுபுறச்சூழல் மட்டுமல்ல மற்றதெல்லாமே மறந்து விடும் என்பதை நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அறிவு பூர்வமாகவும்இ அனுபவ பூர்வமாகவும் அறிந்து கொண்டேன். என்னுடைய 69வது வயதில் மன்னார் பெரியகடை ஞான வைரவர் கோவிலை கட்டி எழுப்ப முற்பட்ட போது நான் இதை மீண்டும் அனுபவபூர்வமாக அறிந்து கொள்ள இறைவனால் வாய்ப்பு கிடைத்தது. 1969 யாழ் மத்திய கல்லூரியில் இருந்து பேராதனை மருத்துவ பீடத்திற்கு அனுமதி கிடைத்தது. கல்வியோடு தான் என் இளமை காலம் என்று இல்லாமல் பேராதனை பட்மிற்றன் குழுவிலும் மூன்று வருடகாலம் தொடர்ச்சியாக இருந்தேன். பேராதனை குறுஞ்சிக்குமரன் ஆலயம் எனது ஆன்மீக பசிக்கு தீனிபோட்ட காலம் அது.
தங்களுக்கு கிடைத்த வேலை அனுபவம் பற்றி
1969-1973ம் ஆண்டு பேராதனைப்பல்கலைக்கழகத்தில் இருந்து மருத்துவ பட்டதாரியாக வெளியேறி யாழ்ப்பாணத்தில் 1வருடம் பணியாற்றி விட்டு மன்னார்இ கண்டிஇ நாவலப்பிட்டி போன்ற பல இடங்களில் பணியாற்றியுள்ளேன். 5வருடம் படித்த கல்வியோடு இல்லாமல் தொடர்ச்சியாக 42 வருடங்களாக படித்துக்கொண்டுதான் இருக்கின்றேன.; யாழ்ப்பாணத்தில் வேலை செய்யும் போது 13சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்களோடு பணியாற்றியுள்ளேன். என்னைப்போல வேறுயாரும் இவ்வாறு 13 சத்திரசிகிச்சை நிபுணர்களோடு பணியாற்றி இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை ஒவ்வொறு துறையிலும் நிபுணத்துவம் வாய்ந்த குழந்தை சத்திர சிகிச்சை நிபுணர்கள்இமகப்பேறு பெண்நோயியல் சத்திர சிகிச்சை நிபுணர்கள்இ நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்கள்இ எலும்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர்கள்இ இருதயசத்திரசிகிச்சை நிபுணர்இ பொதுசத்திரசிகிச்சை நிபுணர்களோடும்இ பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர்களுடன் பணியாற்றியமை நல்ல அனுபவமும் பாக்கியமும் எனக்கு இறைவனால் தந்த வரம் என கூறலாம்.
தங்களின் மன்னார் வருகை பற்றி
இருதயசத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி நற்குணம் அவர்கள் தான் மன்னார் நல்ல இடம் அடுத்த முறை மாற்றம் கிடைக்கும் போது மன்னாருக்கு போங்கள் என்று எனக்கு ஆலோசனை வழங்கினார். அவரின் ஆலோசனைப்படி நான் மன்னாருக்கு வந்தேன். மன்னார் வைத்திய சாலையின் வைத்தியராக கடமை ஏற்று வெளிநோயாளர் பகுதியில் இருக்காமல் குழந்தை வைத்திய பிரிவு,மகப்பேறு பெண்ணோயியல் பிரிவு,பொது மருத்துவ பிரிவு,சத்திய சிகிச்சை பிரிவு என்று மாறி மாறி வேலைசெய்து வந்தேன். எல்லா துறைகளிலும் எனது அறிவையும் அனுபவத்தையும் பெருக்க இந்த பயிற்சி எனக்கு பெரும் உதவி செய்தது. பின்பு மாவட்ட வைத்திய அதிகாரியாக பணியாற்றிவிட்டு இப்பதவியை ராஜினாமா செய்து 1980ம் ஆண்டு தனியார் வைத்திய சாலை ஒன்றை ஆரம்பித்தேன்.
யுத்தம் காரணமாக மீண்டும் 1990இல் மன்னாரில் எந்த வைத்தியரும் இல்லை பாலம் உடைக்கப்போகிறார்கள் என்ற பயத்தினால் எல்லா வைத்தியர்களும் வெளியேறி விட்டனர். அன்று ஜனாதிபதியாக இருந்தவர் மேன்மை தங்கிய ஆர்.பிரேமதாஸ அவர்கள் மன்னாருக்கு வருகை தந்திருந்த போது நேரடியாக என்னை சந்தித்து. இந்த மக்களுக்கு உங்களால் உதவ முடியாதா...? எனக்கேட்டார் நான் அவரிடம் மன்னாரில் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது மன்னார் மாவட்டம் முழுவதும் மருத்துவ சேவை முடங்கி கிடக்கின்றது என்ற உண்மையை அவருக்கு எடுத்துரைத்தேன். அவர் உடனடியாக சுகாதார அமைச்சரை மன்னாருக்கு அனுப்பி என்னை மன்னார் மாவட்டத்திற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக நியமித்தார்.
சுகாதார வைத்திய அதிகாரியாக இப்போது 5பிரிவிற்கும் 5 சுகாதார வைத்திய அதிகாரிகள் இருக்கின்றார்கள். அப்போதைய காலகட்டத்தில் 5பிரிவிற்குமே 1சுகாதார வைத்திய அதிகாரியாக செயற்பட்டேன். தற்போது 15 மருத்துவர்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் இருக்கின்றார்கள.; யுத்தகாலத்தில் கஸ்ரமான நேரத்தில் 22 பேரின் வேலையை தனியொருவனாக நின்று சேவையாற்றியுள்ளேன். மருந்து தட்டுப்பாடு என்பது ஒரு பாரிய பிரச்சனையாக இருந்தது. கொழும்பில் உள்ள மருந்து வழங்கும் நிறுவனம் (ஆளுனு) பாதை மூலம் கொண்டு வர முடியாமையினால் அவர்கள் மருந்தை அனுப்புவதை நிறுத்தி விட்டார்கள். ஆகவே மன்னார் மாவட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரிக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளோடு மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல கிராம வைத்தியசாலைகளுக்கும் தேவையான மருந்துகள் அனைத்தையும் கொழும்பில் இருந்து லொறியில் கொண்டுவந்து தாழ்வுபாடு இறங்குதுறையில் இறக்கி ஒவ்வொன்றாக இராணுவத்தினால் பரிசோதிக்கப்பட்டு பின்பு மூட்டைகட்டி மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல வைத்திய சாலைகளுக்கும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலை உட்பட எல்லா வைத்திய சாலைகளுக்கும் என்னால் அனுப்பி வைக்கப்பட்டது. இப்படியாக எனது சேவை தொடர்ந்தது.
யுத்த காலத்தில் நடந்த மிகவும் கொடிய சம்பவம் பற்றி
பலவுள்ளது. என்னோடு தொடர்புடைய ஒன்றை சொல்கிறேன். மடுப்பகுதியில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட பெரும் தாக்குதலில் மடுத்தேவாலயத்தில் வைத்து 48 பொது மக்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது மன்னார் நீதவானாக இருந்தவர் கௌரவ இழஞ்செழியன் என்னோடு தொடர்பு கொண்டு வாருங்கள் ஒரு முறை சென்று நேரடியாக பார்த்திட்டு வருவோம் என்றார். புறப்பட்ட நேரத்தில் பொலிஸார் பாதுகாப்பு கருதி மன்னார் நீதவானை செல்ல மடுறோட் சந்திக்கு அப்பால் அனுமதியளிக்கவில்லை. இராணுவத்தினர் என்னிடம் கேட்டார்கள் நீங்கள் போகவா போகிறீர்கள் என்று.நான் செல்கிறேன் எனக்கு பயமில்லை வைரவர்; என்னை காத்துக்கொள்வார் என்றேன். நானும் துணிச்சலுக்கு பேர் போனவரும் எம் இனத்தின் மீது அளவில்லாத பற்றும்இபாசமும் கொண்ட மன்னார் ஆயர் மேதகு கலாநிதி இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்களும்; என்னுடன் எந்தவிதமான அச்சமும் இன்றி வந்தார்.
அங்கு சென்று பார்த்த பொழுது 48 சடலங்களும் கிடந்தன. அந்த சூழல் மிகவும் சோகமாகவும்வேதனை நிறைந்ததாகவும் இருந்தது. அத்தனை சடலங்களையும் பாயில் கட்டி அவர்களுடைய பெயர் விபரங்கள் போட்ட லேபில் கட்டி லொறியில் ஏற்றி மன்னாருக்கு கொண்டு வந்தோம். வைத்தியசாலையில் நீதவான் சடலங்களை பார்வையிட்டார். போஸ்மோட்டம் செய்ய எந்த வைத்தியரும் வைத்திய சாலையில் இல்லை. அப்போது மீண்டும் நீதவான் கௌரவ இழஞ்செழியன் கேட்டார். பிணப்பரிசோதனைகளை சட்ட வைத்திய அதிகாரி அல்லது மாவட்ட வைத்திய அதிகாரி செய்ய வேண்டும். இவர்களில் யாரும்; இல்லாத சந்தர்ப்பத்தில் மருத்துவம் படித்த யாரும் செய்யலாம் என்ற விதி ஒன்றும் இருக்கின்றது. அதையும் நாகரீகமாகத்தான் கேட்டார். சட்டநூலைத்தந்து இதை ஒரு முறை வாசித்துப்பாருங்கள் என்று தனக்கு சரியாக விளங்க வில்லை என்று தந்தார்.
நான் வாசித்து விட்டு நான் சொன்னேன். மருத்துவம் படித்த யாரும் செய்யலாம் என்றேன். உங்களால் செய்ய முடியுமா என்று கேட்டார். எனக்கு இது ஒரு சின்ன விடையம் பெரிய விடையமே இல்லை என்றேன். இதைப்போல பல போஸ்மோட்டங்கள் செய்திருக்கிறேன் என்றேன் அன்று 10மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் காலை 9மணி வரைக்கும் பெரும் துன்பத்தின் மத்தியிலும் அதில் இருந்து எழும் துர்நாற்றம் சுவாசிக்க முடியாத நிலையிலும் பச்சத்தண்ணீர் கூட அருந்தாமல் தூக்கமின்றி 48 சடலங்களையும் போஸ்மோட்டம் செய்து முடித்தேன். ஸ்பிரிட்டோ போமிக் அமிலமோ இல்லாத நிலையில் சாராயத்தில் ஸ்பிரிட் இருப்பதால் சாராயத்தின் மூலம் தான் உடலைக்கழுவி வாசனைத் திரவியங்கள் தெளித்து மருந்துப்பவுடர்கள் போட்டு புதிய வெள்ளை ஆடைகளை அணிவிக்க பங்குத்தந்தையர்கள் பெரும் உதவி புரிந்தார்கள். ஆபத்துக்கு கைகொடுத்து உதவும் இந்த பங்குத்தந்தைமார்களுக்கு நன்றி சொல்ல இதுவரை எனக்கு வார்த்தைகள் கிடைக்க வில்லை.48 போஸ்மோட்ட அறிக்கையும் தயாரித்து கௌரவமாக நீதவான் முன்னிலைப்படுத்தினோம். இது என்வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்றாகும்.
இன்னுமொரு சம்பவத்தையும் நான் இங்கே பதிவு செய்தே ஆகவேண்டும். இந்தக்காலக்கட்டத்தில் கொலரா நோய் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பரவத்தொடங்கியது. பெரும் மருந்து தட்டுப்பாடும், சேலைன் போன்ற மருந்துகளும் அவசரமாகத் தேவைப்பட்டன. இந்தநிலை அங்குள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்களால் எனக்கு அறிவிக்கப்பட்டபோது, மன்னார் இராணுவ இணைப்பதிகாரியிடம் நான் சென்று இந்த விடயங்களை விளங்கப்படுத்தி எந்த எந்த வைத்தியசாலைகளுக்கு அவசியமாக தேவைப்படும் மருந்துகளை மன்னாரிலிருந்து கொண்டுசெல்லப்பட வேண்டும் என்பதை விளக்கி அதற்கான மருந்துகளையும் அட்டவணைகளையும் தயாரித்து அவருடைய அனுமதிக்கு அனுப்பி வைத்தேன்.
அப்போது கட்டளைத்தளபதியாக இருந்த திரு. சில்வா அவர்கள் இதற்கான அனுமதியை எனக்கு வழங்கியிருந்தார்கள். இதன்படி இந்த மருந்து பொருட்கள் எல்லாம் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. மூன்று நாள் பயணத்தின் பின்னர் நான் திரும்பி வந்தபோது மருந்துப் பொருட்கள் யாவும் புலிகளுக்கே கொண்டு செல்லப்பட்டன என்றும், வைத்தியசாலைக்கு அல்லவென்றும் தங்களுக்கு புலனாய்வுத்தகவல் கிடைத்துள்ளது என இராணுவ இணைப்பதிகாரிக்கு இரண்டாவதாக பணிபுரியும் உத்தியோகத்தர் எனக்கு தொலைபேசி மூலம் அறிவித்திருந்தார். அப்போது இராணுவ இணைப்பதிகாரி சில்வா அவர்கள் விடுமுறையில் கொழும்பு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என்னை உடனடியாகக் கைது செய்து அடுத்தநாள் காலையிலேயே 6 மணிக்கு கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் கையளிப்பதற்காக இராணுவ முகாமிற்கு கொண்டு வரும்படி பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த செய்தியை அறிந்த பொலிஸ் நிலையத்தில் வேலை பார்த்த அத்தனை பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியர் கதிர்காமநாதனை கைது செய்யக்கூடாது என்று கூறி இரவு உணவை பகிஸ்கரித்து சாப்பிடாமலே நித்திரைக்குச் சென்று சாத்தீக முறையில் போராட்டம் நடத்தினர். பெண் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் இவ்விடயம் பொலிஸ் அத்தியட்சகருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பொலிசுக்குள்ளேயே ஒரு குழப்பம் இருப்பதை புரிந்து கொண்ட பொலிஸ் அத்தியட்சகர் சமூகத்தில் பெரும் மதிப்பும், மரியாதையும் உள்ள வைத்தியர் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்க மறுத்தார். அடுத்தநாள் காலை 6 மணிக்கு என்னை தள்ளாடி இராணுவ முகாமிற்கு செல்லுமாறு ஒரு வேண்டுகோளை மட்டும் விடுத்திருந்தார். இந்த விடயம் எப்படியோ இராணுவ இணைப்பதிகாரியான கட்டளைத்தளபதி சில்வா அவர்களுக்கு கசிந்திருந்தது. அவர் எனக்கு ஒரு தொலைபேசி மூலம் அன்றிரவே நாளை காலை 6 மணிக்கு நீங்கள் இராணுவ முகாமிற்கு வரவேண்டாம். காலை 7 மணிக்கு இற்கு வரும் வானூர்தியில் நான் தள்ளாடி முகாமில் இறங்கியவுடன், உங்களுக்கு தொலைபேசி மூலமாக தொடர்புகொள்வேன். இராணுவ முகாம் வாசலில் இராணுவ வீரர் ஒருவர் உங்கள் வாகனத்தில் ஏறி என்னிடம் கொண்டுவந்து சேர்ப்பிப்பார்.
மிகுதியினை நான் பார்த்துக்கொள்கின்றேன். எதற்கும் பயப்படாமல் இருங்கள் என்று தைரியமூட்டினார். இராணுவ இணைப்பதிகாரி தள்ளாடி முகாமிற்கு வந்தவுடன் காலை 7.30 மணியளவில் என்னிடம் தொடர்புகொண்டு உடனடியாக என்னை வரச்சொல்லி கூறினார். அங்குசென்றவுடன் அவர்கேட்ட முதல்கேள்வி; சாப்பிட்டீர்களா? காலை தேனீர் குடித்தீர்களா? என்பதேயாகும். நான் இல்லையென்று கூறி வைரவக்கோயிலுக்கு மட்டும் போய்விட்டு வந்தேன். வரும்போது அங்குள்ள வாசலில் நின்ற பெண்பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாங்கள் இரவு சாப்பிடவில்லை என்ற கதையினை சொன்னார்கள் என்பதனையும் தெரியப்படுத்தினேன். அதன்பின் அவர் வாருங்கள் என கூட்டிச்சென்று இருவருமாக காலை உணவாக பால்சோறும், கட்டைச்சம்பலும் சாப்பிட்டு, தேனீரும் அருந்தினோம். அதன்பின் அப்போது இராணுவ இணைப்பதிகாரிக்கு இரண்டாவதாக பணிபுரியும் உத்தியோகத்தரை வரச்சொல்லி இராணுவ வீரரை அனுப்பி என்னுடைய கோவையை கொண்டு வரச்சொல்லி பணித்தார்.
தன்னுடைய திட்டம் தவிடுபொடியாகிவிட்டதை உணர்ந்த இவ் உத்தியோகத்தர் இணைப்பதிகாரிக்கு சலூட் அடித்துவிட்டு எனது கோவையினை கொண்டுவந்து கொடுத்தார். அப்பொழுது இணைப்பதிகாரி சில்வா அவர்களிடம் கேட்டார். இந்த மருந்துகள் எல்லாம் என்னுடைய உத்தரவின் பேரிலேயே கொண்டு செல்லப்பட்டது தெரியுமா? தெரியாதா? கோவையினை நீ வடிவாக வாசித்துப் பார்ப்பதில்லையா? உயிரைப் பணயம் வைத்து புனிதமான வைத்திய தொழிலை செய்யும் வைத்தியர் ஒருவரை நீ முறைகேடாக நடத்த முற்பட்டிருக்கிறாய். இதுதான் உனக்கு நான் முதலாவதும், கடைசியாகவும் விடுக்கும் எச்சரிக்கையாக இருக்கும் என்று கூறி கோவையில் இரண்டாவதாக பணிபுரியும் உத்தியோகத்தர் எழுதிய பாரதூரமான குற்றச்சாட்டுகளின் கீழே இந்த மருந்துகள் எல்லாம் எனது அனுமதியின் பேரில் அங்குள்ள மக்களுக்காக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆகவே இந்த வைத்திய அதிகாரியின் தன்னுடைய கடமையைச் சரிவர செய்கிறார் என்று பாராட்டி யாரும் மேற்கொண்டு எந்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிடுகின்றேன் என்று எழுதி அந்த விடயத்தினை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார். என்னுடன் கதைக்கும் போது இராணுவ இணைப்பதிகாரி சில்வா அவர்கள் சொன்னார் நாங்கள் இங்கே வந்திருப்பது ஆயுதம் தரித்த தீவிரவாதிகளினை அழிப்பதற்காகத்தான் நீங்கள் ஒரு ஆன்மீக போராளியாக இருப்பதனால்தான் இந்த சிக்கல்கள் எல்லாம் உங்களுக்கு வருகின்றது. இதற்கு யார் காரணம் என்பதும் எனக்கு தெரியும். அதனால்தான் இந்த விடயத்தை வளரவிடாமல் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். இந்த இராணுவ இணைப்பதிகாரி பிரியாவிடைப்பெற்றுச் செல்லும்போது எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அரைமணி நேரமாக பிரியாவிடை உறையாற்றிய நான் இறுதியில் கண்ணீர் சிந்திய போது நான் போகின்றேன் என்று கவலைப்பட வேண்டாம். உங்களை வைரவர் என்றென்றும் பாதுகாப்பார் என்று சொல்லிச்சென்றார்.
அப்போதைய மருத்துவர்களுக்கும் தற்போதுள்ள மருத்துவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு எவ்வாறு உள்ளது
அந்தக்காலத்தில் மருத்துவர்களை தெய்வத்திற்கு சமமாக தான் மதித்தார்கள். முழுமுதல் கடவுளான சிவனுக்கே வைத்திய நாதன் என்ற பெயர் உள்ளது. 100க்கு 100 வீதம் சேவையின் நோக்கோடுதான் கடமைபுரிந்தார்கள். கடவுளுக்கு சமமானவர்களாகவே தங்களை உயர்த்திக் கொண்டு சமூகத்திலும் நல்ல மதிப்பை பெற்றுக் கொண்டனர். தற்போதைய மருத்துவர்களை பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. அது உங்கள் எல்லாருக்கும் தெரிந்த விடயம். 69 வயதிலும் அதிகம் உழைக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. எனக்கே இரண்டு முறை மாரடைப்பு வந்திருக்கிறது. மூன்றாவது முறை எப்பவும் வரலாம் எப்பவும் இறக்கலாம். இறுதி யாத்திரையில் யாரும் காசையோ காணி பூமியையோ தன்னுடன் கொண்டு செல்ல முடியாது. ஆனபடியால் என்னை நம்பி என்னிடம் வரும் நோயாளர்களிடம் தேவையான அளவு ஆலோசனைகள் வழங்கி அனுப்புகிறேன். என்னிடம் எல்லாவிதமான பரிசோதனைகளும்,ஸ்கேனிங் எஸ்ரே, ஈசீஜீ, இருதயப்பரிசோதனை, இரத்தப்பரிசோதனைகள் உற்பட செய்யலாம். இங்கு செய்த முடியாத இரத்த பரிசோதனைகள் கொழும்பு டேடன் வைத்தியசாலையில் கிழமைக்கு இரண்டு முறை இரத்தத்தை எடுத்து அனுப்பி பரிசோதனை செய்து கொடுக்கப்படுகின்றது. அங்கும் செய்ய முடியாத இரத்த பரிசோதனைகள் சிங்கபூருக்கு அனுப்பி செய்யக்கூடிய வலையமைப்பையும் என்னுடைய கிளினிக் கொண்டுள்ளது. பிரபலமான சத்திரசிகிச்சை நிபுணர்கள், இருதய சத்திர சிகிச்சை நிபுணர்களின் தொலைபேசி இலக்கமும் என்னிடம் உள்ளது. தேவையான ஒரு நோயாளிக்கு அவசியம் ஏற்படின் அந்தந்த வைத்திய நிபுணர்களுடன் கதைத்து அதற்கான சகலவசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கின்றோம்;.
அந்தக்காலத்திலும் இந்த காலத்திலும் உள்ள வைத்தியர்களின்; அறிவு சார்ந்த தரம் பற்றி?
Teaching Hospital இல் உள்ள பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், வைத்திய நிபுணர்கள் தனியார் மருத்துவமனையில் வேலைசெய்ய முடியாது என்றதடை இருந்தது. அதனால் அவர்கள் மருத்துவ மாணவர்களுக்கு முழுநேரமும் கற்பிக்கும் செயல்பாட்டில் ஈடுபட கூடியதான சூழல் அமைந்திருந்தது. நிலைமை இப்போது அப்படி இல்லை. இதனால் வைத்திய மாணவர்களுக்கு தரமான வைத்தியக் கல்வியையும் பயிற்சியையும் வழங்கும் வைத்தியர்கள் அரிதாகி வருகின்றார்கள். இப்படியான பல சூழ்நிலைகளால் நல்லதொரு மருத்துவ சமூதாயத்தினை வரும் காலத்தில் உருவாக்க முடியுமா என்ற சந்தேகத்திற்கு நான் விடை தேடிக்கொண்டிருக்கிறேன்.
இலங்கையில் போலி மருத்துவர்கள் 5427 என பத்திரிகையில் படித்தேன் இன்னும் இருக்கலாம் இது பற்றி தங்களின் கருத்து-
இவ்வுலகில் அதிகமாக பணம் சம்பாதிக்க கூடிய பல தொழில்கள் உள்ளன. அவற்றில் பிரதானமான 4 தொழில்கள் உண்டு. போதை. குடு வியாபாரம். கசினோ. சூதாட்டம். விபச்சாரம் மருத்துவம் இந்த நான்கில் குடு.சூதாட்டம். விபச்சாரம் இம் மூன்றிற்கும் முதலீடு. தொடர்பாடல். விளம்பரம். அரசியல் செல்வாக்கு. பணபலம் போன்றன தேவை. அதேநேரத்தில் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய கஸ்டமான சூழ்நிலை. ஆனால் போலி மருத்துவத்தைப் பொறுத்தமட்டில் இவை எதுவுமே தேவையில்லை. ஒரு ஸ்ரெரஸ்கோப்பும் சிறிய இடமும் போதும். போலிமருத்துவரானவர் தனது பெயருக்குப்பின்னால் விரும்பிய பட்டங்களை போட்டுக்கொள்ளலாம். யாரும் இவை உண்மையா... பொய்யா... எனக் கேட்கப்போவதில்லை. எதிர்க்க முன்வரப்போவதும் இல்லை. ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் வைத்தியக்கலாநிதி கேதீஸ்வரன் போன்றவர்கள் போலிமருத்துவர்கள் மட்டில் கடுமையான செயல்திறன்மிக்க செயற்பாட்டை கொண்டுள்ளார்கள்.
ஆரம்பத்தில் மக்கள் இந்த போலி மருத்துவர்களுடைய பேச்சில் மயங்கினாலும் மிகக் குறுகிய காலத்தில் இவர்களுடைய குட்டு வெளிபட்டு விடும். அதனால் மக்களே இலகுவாக கண்டுபிடித்து விடுவார்கள். சொற்ப நாளிலேயே இவர்களின் வேடம் கலையும். போலிமருத்துவர்கள் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று தப்பி ஓடும் நிலை ஏற்படும்.
முன்னைய காலத்தில் மருத்துவர்கள் சொல்வதுதான் தெய்வ வாக்கு அப்படித்தான் மருத்துவர்களும் இருந்தார்கள். தற்போதைய சூழல் அப்படியல்ல நோய்க்கு மருந்தெடுக்க வரும் போது அந்த நோய் சம்மந்தமாக ஏலுமான வரை கணணியில் முழுமையாக அறிந்து கொண்டுதான் வருகின்றார்கள் என்னிடம் பல சந்தேகங்களை கேட்கிறார்கள் அவர்கள் கேட்கும் கேள்விக்காக பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தாலும் நாளுக்குநாள் உருவாக்கம் பெறுகின்ற பல விதமான நவீன நோய்கள் மருந்துகள் செயல்முறைகள் பற்றி மீண்டும் மீண்டும் கற்க வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளது. 5வருட படிப்பு முடித்தால் வைத்தியராகிவிடலாம்; ஆனால் சமுதாயத்தில் நல்ல மருத்துவனாக நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அனுபவமும் தொடர்ச்சியான கற்றலும் தரமான மருத்துவமும் ஆலோசனையும் வழங்க வேண்டும் விழி திறந்து நல்வழியில் தான் மக்கள் வாழ்கிறார்கள் நாம் அவர்களுக்கான வழியினை விரிவுப்படுத்தினாலே போதும்.
போலிமருத்துவர்கள் போல தற்போது பூதகரமாய் கிளம்பியுள்ள பிரச்சினை போலி மாத்திரைகள் தங்களின் பற்றி
போலிமாத்திரைகள் வெளியில் தனியாருடைய பாமசியில் மட்டுமல்ல அரசாங்க வைத்தியசாலைகளிலும் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமையான விடயம். வைத்தியசாலைகளில் நடக்கும் குறைபாடுகளை வெளியில் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அன்று வேலை மட்டும் தான் போகும். இன்றைய நிலையில் ஆளேகாணமல் போய்விடுவார். விபிலே என்ற வைத்திய பேராசிரியர் சொன்னார் மனிதனுக்கு உண்டாகும் நோய்களை குணப்படுத்த அதிகமான மருந்துக்கள் தேவையில்லை. இரண்டு கைகளிலும் உள்ள பத்து விரல்களையும் காட்டி நூற்றுக்கு தொண்ணூறு விதமான வியாதிகளை குணப்படுத்துவதற்கு 10 மருந்துகளே போதும். இவ்வளவு மாத்திரைகள் தேவையில்லை புதிய நிறுவனங்கள் புதிய மாத்திரைகள் தங்க நிறத்தினாலான வெள்ளி நிறத்தினாலான கடதாசிகள் கவர்ச்சிகரமான தோற்றத்தில் வர்ணப்பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றது.
ஒரு நோய்குரிய மாத்திரைக்கு பல பல பெயர்கள் (வுசயனந யேஅந) வைத்து 10ரூபா பெறுமதியான மாத்திரைகளை 1000 ரூபாவிற்கு விற்று கொள்ளை இலாபம் அடிக்கத்தேவையில்லை. கொடுக்க வேண்டிய சகலரிடமும் லஞ்சம் கொடுத்து பல புதிய நிறுவனங்கள் தரமான நிறுவனங்களின் பெயரில் தரமில்லாத போலி மாத்திரைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள். ஈய்யத்தாளில் பளபளவென மின்னும். ஆனால் உள்ளே ஒன்றும் இராது. கோதுமைமா தான் இருக்கும் இல்லாவிடின் கல்சியம் காபனேற் சுண்ணாம்பு இருக்கும் டயபற்றிக்ஸ் தைரொக்சின்,இரத்தஅழுத்தம் போன்வற்றுக்கு பாவிக்கும் மாத்திரைகள் அதிகமான மக்கள் பாவிக்கின்றார்கள். அதிலும் போலிதான் அதிகம். இது பல வைத்திய நிபுணர்களுக்கும் தெரிந்த உண்மை. தெரிந்தும் அமைதியாக இருக்கவேண்டிய சூழ்நிலை. இப்படியான போலி மாத்திரைகளை போட்டுக்கொண்டே இருக்க எந்தப்பலனும் கிடைக்காமல் வருத்தம் கட்டுபாடு இல்லாமல் முற்றிலும் உயிருக்கு ஆபத்தாக முடிகின்றது.
இலங்கையில் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் கடமைபுரிந்த வைத்திய பீடாதிபதியும் பேராசிரியருமான வைத்தியக்கலாநிதி விபிலே என்பவரால் உருவாக்கப்பட்ட இலங்கை மருந்தாக்கள் கூட்டுத்தாபனம் இங்கே தரமான மருந்துகள் நியாயமான விலையில் தரக்கட்டுப்பாட்டுடன் ஏழைகளும் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் மலிவான விலையில் தயாரிக்கலாம் என்பதை செயல் மூலமாக செய்து காட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில்; திடிரென காணமல் போனார். அவருக்கு என்ன நடந்தது என்றே இதுவரை தெரியாது. சர்வதேச மருந்து வியாபாரத்தில் பணமும் அதிகாரப்பலமும் சகல வல்லமையும் கொண்ட பயங்கரமான அமைப்புக்கள் இருக்கின்றது. இவரது நிலைப்பாடு அவர்களுக்கு பெரும் தலையிடியாக இருந்ததாலும் வியாபாரத்தில் பெரும் இழப்பீடுகளை அவர்கள் சந்திக்க நேர்ந்ததாலும் அவருக்கு இக்கதி ஏற்பட்டது. அவர் இல்லாத காலத்திலும் அவர் உருவாக்கிய இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இப்போதும் நல்ல தரமான மருந்துகளை தரக்கட்டுப்பாட்டுடனும் மிகக் குறைந்த விலையிலும் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகின்றார்கள். அதுபோல யளவசழn அஸ்ரன் நிறுவனமும் Glaxo Smath Klime (GSK), MSJI, போன்ற தனியார் நிறுவனங்களும் நல்ல தரமான மருந்துகளை தயாரித்து சந்தை படுத்துகிறார்கள். ஆனாலும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் போலி மாத்திரைகளை உற்பத்தி செய்து விநியோகித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
சித்தமருத்துவம்(தமிழ் மருத்துவம்) ஆங்கில மருத்துவம் (நவீன மருத்துவம்) இவை இரண்டில் எது சிறந்தது எதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்
பழையகாலம் தொட்டு இக்காலம் வரை நீண்ட கால வாதம், பாரிசவாதம், முறிவு நோய்களுக்கு சித்தமருத்துவம் தான் கைவந்த மருந்துவம் என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே இருக்கின்றது. திடிரென வருகின்ற நோய்களுக்கு உடனடி நிவாரணியாக ஆங்கில மருத்துவத்தினைத்தான் நாடுகின்றார்கள். உடனடி நிவாரணி சித்தமருத்துவத்திலும் இல்லை என்று சொல்லுவதற்கில்லை. யாழ்ப்பாணத்தில் GREEN MEMORIEL HOSPITAL இல்தான் முதன் முதலில் ஆங்கில மருத்துவத்திற்கான பட்டப்படிப்பினை படித்து வெளியேறினார்கள். பிறகுதான் கொழும்பு-பேராதனை ஏனைய பல்கலைக்கழகங்கள் உருவாகின. இந்த நவீனமருத்துவம் வருவதற்கு முன்பு சித்தர்களால் உருவாக்கப்பட்ட சித்தமருத்துவம் தான் இருந்தது. இந்த சித்தமருத்துவம் தன்னை பாதுகாத்து அழிவில் இருந்து காப்பாற்ற படாதபாடுபட்டுக்கொண்டிருப்பது ஒரு கவலைக்குரிய விடயம். ஆயுள்வேத மருந்துக்கு இன்னொரு பெயரும் உண்டல்லவா. ஆயுளை அதிகரிக்கும் மருத்துவம் அல்லவா அது.
உணவுப்பழக்கங்கள் வாழ்க்கை முறைகளில் மாற்றும் தொலைக்காட்சியில் இருந்த படியே மணிக்கணக்கில் பார்க்கும் மெகாசீரிஸ் படங்கள் கணனியில் இருந்து கொண்டே இன்டநெற் உட்பட சகல வேலைகளையும் பார்ப்பதால்; உடற்பயிற்சி இல்லை. அதை செய்வதற்கான நேரமும் கிடையாது. புதுப்புது நோய்கள் ஒரு நோய்க்கு 10-13 மாத்திரைகள் போடவேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது. சித்தமருத்துவத்தின் சிறப்பினை அதன் பழமையினை உணராமல் ஒருசில ஆயுள்வேத வைத்தியர்கள் ஆங்கில மருந்தினையும் கலந்துதான் மருந்துகள் தயாரிக்கின்றார்கள். இதனால் சித்தமருத்துவத்தின் தனித்துவம் மங்கிப்போகின்றது. எல்லோருமல்ல ஒரு சிலரின் முயற்சிதான். இது எங்களுடைய மூதாதையர்கள் சித்தமருத்துவத்தின் மூலம்தான் 100 வருடகாலங்களுக்கு அதற்கு மேலும் வாழ்ந்தார்கள் என்பதை ஒருசில சித்தவைத்தியர்கள் மட்டும்தான் உணராமல் இருக்கின்றார்கள் என எண்ணதோன்றுகின்றது. சித்தமருத்துவத்தில் பாவிக்கப்படுகின்ற இயற்கை மூலிகைகள் தளை இலை குழை வேர் எல்லாம் ஆங்கில மருத்துவத்திலும் பாவிக்கப்படுகிறது.
சித்தமருத்துவத்தில் OPIUM, ஆங்கில மருத்துவத்தில் MORPUIA சித்தமருத்துவத்தில் ஊமத்தை ஆங்கில மருத்துவத்தில் கண்முழியை விரிவடையச்செய்ய Atrophine என்ற பெயரில் பாவிக்கப்படுகின்றது. சித்தமருத்துவத்தில் பட்டிப்பூ சிகப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆங்கில மருத்துவத்தில் Vincristine என்ற பெயரில் புற்றுநோய்க்கும் ருமற்றொயிட் ஆத்திரையிட்டிஸ் என்ற நோய்க்கும் பயன்படுத்தப்படுகின்றது.
சித்தமருத்துவத்தில் சோற்றுக்கற்றாளை ஆங்கில மருத்துவத்தில் Alovera இது முகப்பளபளப்பிற்கும் சிறந்த மென்பானமாகவும் கிறீமாகவும் பயன் படுகின்றது. காத்திகைப்பூ புற்று நோய்க்கு மருந்து தயாரிக்கப்பயன்படுகிறது. ஆயுள் வேதத்தை முற்றாக அழிக்கும் நோக்கில் விரைவாக பணம் சம்பாதிக்க விரும்பும் ஒரு சிலர் மசாஜ் கிளினிக் என்ற பெயரில் மழை காலத்தில் காளான் முளைப்பது போல ஒவ்வொரு நாளும் புதுபுது மசாஜ் கிளினிக்குகள் உருவாகின்றன. இவற்றில் என்ன நடைபெறுகின்றது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.
இங்கு குறிப்பாக சோற்றுக்கற்றாளையினை எமது உவர்ப்பிரதேசமான கடற்கரையோரங்களில் தாராபுரம் தொடங்கி தலைமன்னார் தொங்கல்வரை எத்தனையோ ஏக்கர்பரப்பில் விளைந்து கிடக்கின்றது. இதன் மகத்துவம் நமக்கு தெரியாது. இங்கிருந்து அவற்றைப்பிடுங்கி லொறிகளில் ஏற்றி கொழும்புக்கு அனுப்புகிறோம். இடைத்தரகர்கள் அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றார்கள். அவர்கள் அதை தகுந்த முறையில் பதப்படுத்தி குடிக்கும் பானமாகவும் பூசும் கிறீமாகவும் ஒரு அவுன்ஸ்தான் 25 பவுண் விற்பனையாகின்றது. லண்டன்,நோர்வே,கனடா,சுவிஸ்,ஜேர்மனி போன்ற நாடுகளில் சோற்றுக்கற்றாளையை புதுமையாகவும் ஆச்சரியமான பானமாகவும் வாங்கிப் பருகுகின்றார்கள். ஆனால் நாம் தான் அதன் மகத்துவம் புரியாமல் இருக்கின்றோம.; இங்கு சும்மா கிடைக்கின்ற சோற்றுக்கற்றாளையினை நாமே பதப்படுத்தி எமது மண்ணிலே உள்ள இளைஞர் யுவதிகளை வைத்து தயாரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைப்பதோடு வருமானத்தினை அதிகரிக்கலாம்.இதற்கு வர்த்தக வாணிபத்துறையும் ஆயுள்வேதசபைகளும் ஏற்றுமதிசபையும் இதைக்கொஞ்சம் கவனத்தில் எடுத்து கொண்டால் மன்னாரில் மூலிகைத்தோட்டம் போல சோற்றுக்கற்றாளை தோட்டத்தினை உருவாக்குவதன் மூலம் உற்பத்தி நிறுவனத்தினை உருவாக்கி Value Addition என்ற பெறுமதி சேர் முறைமையையும் சேர்ப்பதன் மூலம் வளமான ஒளிமயமான பொருளாதார சுபீட்சம் கொண்ட ஒரு மன்னாராக உருவாக்கலாம்.
இன்றைய இளைஞர் யுவதிகள் இனக்கவர்ச்சி-சினிமாமோகம்-தொலைபேசிப்பாவனை நவீன கலாச்சாரத்தில் தப்பான பாலியல் உறவுகளால் ஏற்படுகின்ற இளவயது கர்ப்பம் பற்றி தங்களின் கருத்து
பெற்றோர்கள் தமது இளம் வயது பிள்ளைகளில் அன்பும் அக்கறையும் காட்டாத வரை இது ஒரு தவிர்க்க முடியாத கலாச்சார சீரழிவில் மக்களையும் நாட்டையும் தள்ளி விடும். இளம் வயது கர்ப்பத்திற்கு கருக்கலைப்பு என்பது தீர்வு அல்ல என்பதே எனது கருத்தாகும். முன் போல் இல்லாது இப்போது உள்ள கிராமங்களிலும் போதுமான பயிற்றப்பட்ட மருத்துவ மாதர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருகின்றார்கள். அவர்களும் போதுமான அறிவுரைகளை சொல்ல கடமை பட்டுள்ளனர். இந்த அறிவுரைகள் மூலம் பாலியல் உறவுகளால் ஏற்படுகின்ற இளம்வயது கர்ப்பத்தை தவிர்த்துக் கொள்ள முடியும்.
இருதய வருத்தத்தாலோ அல்லது வேறு ஏதும் உயிர்கொல்லி நோயினாலோ தாயின் உயிருக்கு தாயின் வயிற்றில் உள்ள கருவினால் ஆபத்து ஏற்படும் என்று விசேட வைத்திய நிபுணர் சிபாரிசு செய்யுமிடத்தில் மகப்பேறு வைத்திய நிபுணர் தாயை காப்பாற்றுவதற்காக இந்த கருவை இல்லாமல் செய்வதற்கு சட்டப்படி உருத்துடையவராவார். 30வருடகால போரில் இலட்சக்கணக்கானவர்கள் இறந்தும் வெளிநாடுகளுக்கு சென்றும் விட்டனர். எஞ்சியிருப்போர் முள்ளிவாய்க்கால் வரை சென்று கையையோ காலையோ ஏதோ ஒரு உறுப்புகளையோ இழந்த நிலையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன ஒழிப்பு என்பது முள்ளி வாய்க்காலுடன் முடிந்து விட்டது என்று நாம் நினைக்க கூடாது. மக்கள் தொகை நாட்டில் குறைவடைந்த இந்த நிலையில் கருத்தடை சாதனங்களான கருத்தடைமாத்திரை கருத்தடைஊசி, லூப் ஜடேல் போன்ற சாதனங்கள் அனைத்துமே இன ஒழிப்புக்கே துணை போகின்றன என்றே சொல்ல வேண்டும். எமக்கு இப்போ தேவையான விடயம் எமது இனத்தை பெருக்குவதற்காக பிள்ளை பெறக்கூடிய வயதில் உள்ள பெண்களும் ஆண்களுமே ஆவர். இன்று போரில் இறந்தவர்களை தவிர எஞ்சிய இளைஞர் யுவதிகள் வெளிநாடு சென்று விட்டார்கள் மற்றவர்கள் வெளிநாட்டில் திருமணம் செய்வதற்காக ஸ்பொன்சரில் சென்று கொண்டிருக்கிறார்கள்.
வீட்டில் இரண்டு கிழடு கட்டைகளே வீட்டில் எஞ்சியிருக்கிறார்கள். இந்த நிலையில் எங்களுக்கு தேவை நிறைய குழந்தைகள். இந்த குழந்தைகள் தான் வருங்கால இளைஞர் யுவதிகள். ஒரு தலைமுறையில் இடைவெளி ஏற்பட்டாலும் கூட இந்த இளைஞர் யுவதிகள் தான் எங்கள் தமிழ் மண்ணையும் தமிழ் கலாச்சார பண்பாடுகளையும் காப்பாற்ற போகின்றார்கள். நவீனமருத்துவத்தால் மலட்டுத்தன்மை பிள்ளைப்பாக்கியம் இன்மை போன்ற பல நோய்களுக்கு தீர்வு காணமுடிகின்றது. பிள்ளைப்பேறு கருப்பையில்லாமலும் வாடகைத்தாய் மூலமும் பிள்ளைபெறலாம். பரிசோதனைக்குழாய் ஆணின் கருவினையும் பெண்ணின் முட்டை இன்னொரு தாயின் கற்பப்பையில் வைத்தும் சினைப்படுத்தல் மூலமும் குழந்தையினை பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது நவீனமருத்துவத்தில் லேசர்இலீனிய கதிரியக்கத்தின் செயற்பாடு
இரண்டு விடயங்களை பற்றி கேட்டிருக்கிறீர்கள். தற்போது நவீனமருத்துவத்தில் கத்திக்கும் சத்திரசிகிச்சை பிளேட்டுக்கு பதிலாக லேசர் கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் இரத்த பெருக்கு இல்லாமலும்; காயத்திற்கான தழும்புளும் தெரியாமலும் போகின்றன.
லீனிய கதிரியக்கத்தின் மூலம் சகல புற்று நோய்களுக்கும் நோய்தாக்கம் உள்ள இடத்தினை மட்டும் அச்சொட்டாக குறிவைத்து அழித்துவிடுவார்கள். முந்திய காலங்களில் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை யுத்த நேரத்தில் குண்டு போடும் போது இலக்கினையும் அழித்து அதனைச்சுற்றியுள்ள பகுதியும் அழிவிற்கு உட்படுத்துவது போல நோய்தாக்கம் உள்ள கலங்களையும் அதற்கு அருகில் உள்ள நல்ல கலன்களும் உறுப்புகளும் அழிந்து பாதிப்புக்கு உள்ளாகும். இந்த லீனிய நவீனத்தின் உதவியால் மிக இலகுவாக நோய்தாக்கம் உள்ள இடம் மட்டும் அழித்து ஒழிக்கப்படும்.
எயிட்ஸ் நோய் பற்றி
எய்ட்ஸ் நோய்க்கு தற்பொழுது மிக உயந்த விலையில் மருந்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வருத்தம் வந்த பின் வைத்தியம் செய்வதை விட வராமல் தடுப்பது தான் ஒரே ஒரு வழி. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைதான் அதற்குரிய சரியான வழியாகும். அது சாத்தியபடாதவிடத்தில் எயிட்ஸ் நோய்பரவாமல் இருக்க ஆணுறையை பாவிப்பது எளிய இலகுவான வழியாகும். பாலியல் தொழிலாளானது மிகப்பழமையான தொழிலாகும். பாலியல்தொழிலாளர்கள் அக்காலம் தொடங்கி இக்காலம் வரை உள்ளனர். சிலநாடுகளில் சட்டபூர்வமாகவும் பல நாடுகளில் மறைமுகமாகவும் செயற்படுகிறார்கள் இதை யாராலும் தடுக்க முடியாது. சாத்தியப்படாத விடயமும் கூட. இந்த கொடிய நோயில் இருந்து பாதுகாக்கும் ஒரேயொரு வழிமுறை சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். ஆணுறைபாவித்தல் பற்றி கிராமங்கள் தோறும் மருத்துவமாதர்கள் ஆலோசனை வழங்குவது அவர்களுடைய சேவையில் ஒன்றாக உள்ளது. மேலும் இப்படியான விழிப்புணர்வுகளை எத்தனையோ அரச,அரசசார்பற்ற நிறுவனங்களும் வெற்றிக்கரமாக மேற்கொண்டுள்ளன இதை அறிந்துகொண்டால் அவதி கிடையாது.
42 வருட மருத்துவச்சேவையோடு ஏனைய துறைகளில் நாட்டம் உண்டா
மருத்துவமும் சமயத்தொண்டும் தான். எனக்கு வேறு துறைகளில் நாட்டமில்லை நேரமுமில்லை. நான் அகில இந்து மாமன்றத்தின் துணைத்தலைவராக இருக்கின்றேன். மன்னார் மாவட்டத்தில் இந்து ஆலயங்களின் ஓன்றியத்தலைவராகவுள்ளேன். அதேநேரத்தில் இந்தியாவில் நடந்த ஒருசம்பவத்தினை சொல்கிறேன்.இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக வெள்ளைக்காரன் நீதிபதியாக இருந்த நேரம். எமது கோயிலில் தீர்த்தம் யாருக்கு முதலில் கொடுக்க வேண்டும். இரு சாதிகளை சேர்ந்த இந்து மக்களுக்கிடையே இந்த பிரச்சனை இருந்து வந்தது. கோயில் தீர்த்தமானது ஒரு சாதியினருக்கு வழங்கிய பின்புதான் மற்ற சாதியினருக்கு வழங்குவது வழக்கமாக இருந்தது. இரண்டு சாதியினருக்கும் ஒரே நேரத்தில் தீர்த்தம் வழங்க வேண்டும் என முரண்பட்டு நீதிமன்றம் வரை வழக்கு சென்றது. விசாரனைகள் நடந்து முடிந்து. இரண்டு பக்கத்திலும் வாதாட வந்த வழக்கறிஞர்களும் தீர்த்தம் தீர்த்தம் என்ற சொல்லையே பயன்படுத்தி ஆவேசமாக வாதிட்டனர். தீர்ப்பெழுதும் நேரம் வந்தவுடன் வெள்ளைக்கார நீதிபதி மிகவும் குழம்பிப்போய் ஒரு கேள்வி கேட்டார் றூயவ ளை வாநநசவாயஅ? ஐவ ளை ய ர்ழடல றயவநச ளசை என்று வாதாடிய வழக்கறிஞர்கள் தெரிவித்தார்கள். வெள்ளைக்கார நீதிபதி ஐயோ...! தண்ணீருக்கா இவ்வளவு சண்டைபிடிக்கின்றீர்கள். நீங்கள் கோயில் நடுவில் ஒரு தொட்டியினை கட்டுங்கள். அதில் இரண்டு பைப்பை பொருத்துங்கள் ஒரே நேரத்தில் இரண்டு பைப்பையும் திறந்து விடுங்கள் இப்போது இரண்டு சாதியினரும் பருகலாம் தானே எனதீர்ப்பெழுதினார். அவருக்கு தீர்த்தம் என்றால் என்ன அதன் மகத்துவம் அதைப்பருகும் முறைகள் புனிதத்தன்மை தெரியாது அவர் இந்துவாக இருந்திருந்தால் அல்லது தீர்த்தம் பற்றி அறிந்திருந்தால் இவ்வாறான தீர்ப்பை வழங்கியிருப்பாரா என்பதை உங்கள் கவனத்திற்கு விட்டுவிடுகிறேன்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்களில் ஏற்படும் நிர்வாக பிரச்சனைகள் . காணிப்பிரச்சனைகள் போன்றவற்றை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாது எங்களுடைய பிரச்சனைகளை நாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் எல்லா ஆலயங்களையும் ஒன்றிணைத்து மன்னார் மாவட்ட இந்து ஆலயங்கள் ஒன்றியம் என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு 29 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக இயங்கி வருகின்றது. எமக்குள் இருக்கின்ற பிரச்சினைகள் முரண்பாடுகள் நாமே தீர்த்துக்கொள்வதும் எமது சமயம் நன்கு அறிந்தவர்களை சட்டத்தரணிகளாக சட்டசிக்கல்கள் ஏற்படும் போது அவர்கள் மூலம் தீர்வு காணவும் தெளிவுபடுத்தவும் முடியும். இதற்கான உதவிகளை இந்து ஆலயங்களின் ஒன்றியத்துடன் இணைந்து அகில இலங்கை இந்து மாமன்றம் செய்து வருகின்றது.
தற்போதுள்ள இளைஞர்யுவதிகள் சமய கலாசாரப்பண்போடு பாரம்பரியத்தினை கடைப்பிடிக்கின்றார்களா?
பெரும்பாலும் குறைந்து கொண்டுதான் போகின்றது. என்று சொல்ல வேண்டும். நவீனயுகத்தில் மூழ்கியுள்ளார்கள். சினிமாஇவெளிநாட்டு மோகம் என அலைகின்றார்கள். தொலைக்காட்சியில் நடைபெறும் மெகாசீரியல் பார்க்க முடியாது போய்விடும் என்பதற்காகவே பெண்கள் இரவு பூசையை தவிர்த்துக் கொள்வதை பல கோவில்களில் காணக்கூடியதாக இருக்கிறது. சில கோவில்களில் சுவாமி தூக்குவதற்கு ஆட்கள் இல்லாத நிலைதான் மன்னாhர் மாவட்டத்தில் உள்ள உண்மை நிலை. இந்த நிலையில் பெரியவர்களுக்கு எமது சமயத்தை பற்றி போதிப்பதில் பெரும் பயனை பெற முடியாது. சிறுவர்களை கோவிலின் பால் நாட்டம் கொள்ளக்கூடியதாகவும் அவர்கள் கோவிலில் வந்து சில சேவைகளை செய்யக்கூடிதான ஆர்வத்தினை உண்டாக்கினால் மட்டுமே எமது சமயத்தை வருங்காலத்தில் காப்பாற்றி வளர்க்க முடியும் என்ற கருத்து எழுந்த நிலையில் 29 வருடங்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கு கிழமை சமய வகுப்பு என்ற பெயரில் சிறுவர் சிறுமியர்களுக்கான சமய வகுப்புக்களை இந்து ஆலயங்களின் ஒன்றியம் மன்னார் பெரியகடை ஞான வைரவர் தேவஸ்தானத்தில் ஆரம்பித்தது.
கோயில்களில் வயது முதிர்ந்தவர்கள் தான் பஞ்சபுராணம் தேவாரம் படிக்கின்ற நிலையில் இருந்து சின்னஞ் சிறுவர்கள் பஞ்சபுராணம் பாடக்கூடிதாக நிலைமை மாற்றம் பெற்று வருகின்றது. இந்த மாற்றம் சிறுவர்களை ஆலயங்களை நோக்கி உள்ளீர்க்கும் ஒரு சக்தியாக விளங்குகின்றது. ஆனாலும் ஒரு சிறுபிள்ளை பஞ்சபுராணம் படிக்கிறதென்றால் அதை பார்த்துக் கொண்டிருக்கும் பெரியவர்கள் அந்த பிள்ளையை கூப்பிட்டு பாராட்டுவதற்கு பதிலாக அது என்ன என்ன பிழைவிட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி அதனுடைய ஆர்வத்தினையும் கோவிலுக்கு போய் தான் தேவாரம்படிக்க வேண்டும் என்ற எண்ணக்கருவையும்இ சமயத்தின் பால்கொண்ட பற்றினையையும்; முளையிலேயே கிள்ளியெறியும் ஒரு சமுதாயமாக நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றோம் என்பது ஒரு பெரும் கவலைக்குரிய விடயம். பெரியவர்கள் இன்னும் தாங்கள் தான் எல்லாவற்றிலும் முன்னுக்கு நிற்க வேண்டும் என்ற நிலை மாற்றப்பட்டு சிறுவர்களை கோயிலின் பால் நாட்டம் கொள்ள செய்வதால் இளம் தலைமுறை கோவிலை தேடிவரும். இதற்கு பெரியவர்களாகிய நாம் தான் அவர்களுக்கான வழியினை விட்டுக்கொடுத்து பின்னால்; நின்று ஊக்கமளித்து உணர்ந்து செயற்பட வேண்டும்.
இதனால் வருங்கால சமுதாயத்தில் ஒரு சைவ எழிற்சி ஏற்படும். கௌரவ பி.பி.தேவராஜ் இந்து கலாச்சார ராஜாங்க அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினால் ஞாயிற்றுக் கிழமை சமய வகுப்பு அறநெறி பாடசாலையாக மாற்றம் பெற்று தொடர்ச்சியாக அறநெறி பாடசாலையாக நடைபெற்று வந்தது. அதன் பின்பு அறநெறி பாடசாலை இணையம் ஒன்று உருவாக்கப்பட்டு நலிவுற்றோர் நலன்காப்பு நிதியத்தின் உதவியுடன் ளு.ளு. இராமகிருஸ்ணன் சு.பிருந்தாவனநாதன் ஆகியோரின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டது.
கோயில்களில் அறநெறி பாடசாலை இணையம் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்பு தொகை ஒன்றை கொடுத்து அறநெறி வகுப்புகளை சிறப்பாக நடாத்தி வருகின்றார்கள். அதன் தலைவராக பிரம்ம ஸ்ரீ மகாதர்மகுமாரசர்மா குருக்கள் அவர்களுடன் திரு.நடேசானந்தன் உடன் இணைந்து இச்சேவையை செய்கிறார்கள். சிறுவர் சிறுமியர் இளைஞர் யுவதிகள் இந்துக் கலாச்சார பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்வதற்காக இந்து ஆலயங்கள் ஒன்றியம் மன்னார் பெரியகடை ஞான வைரவர் தேவஸ்தானத்தில் இந்துக் கலாச்சார கல்லூரி ஒன்றை நிறுவியுள்ளது. யோகாசனம்இ-தியானமஇ; பரதநாட்டியம் இதேவாரம் திருவாசகங்களை பண்னோடு இ;சை பாடல் , மிருதங்கம், வீணை கர்நாடகசங்கீதம் ஆகியவற்றை தெளிவாகவும் கற்றுக்கொடுத்து சமயவழியில் நெறிதவறாமல் நடக்கவும் இந்தத்தலைமுறையை நெறிப்படுத்தி அடுத்துவரும் தலைமுறையையும் நல்லதொரு சமயவிழுமியங்களோடு பண்பாட்டினையும்இ பாரம்பரியத்தினையும் உருவாக்கும் என்ற நம்பிக்கையில் இந்தக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் வழங்கப்படும் சேவைகள் யாவும் இலவசமாகவே வழங்கப்படும். இந்தக் கல்லூரி இன்னும் சில வாரங்களிலேயே இயங்கத் தொடங்கும்.
தங்கள் வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் பற்றி – அனுபவ பகிர்வு:
நிறைய சம்பவங்கள் உள்ளன. எல்லாவற்றையும் இங்கு குறிப்பிட முடியாது. இரண்டு விடயங்களை பற்றி பகிரலாம் என்று நினைக்கிறேன். ஒன்று மலேசியா பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கேட்டுக் கொண்டதற்கிணங்க போர்க்காலத்தில் இடம்பெயர்ந்த மக்களின் வடமாகாண சுகாதார சேவைகள் தொடர்பாக Pழறநச pழiவெ Pசநளநவெயவழைn மூலம் 30.08.2008 அன்று உரையாற்றிய போது எனக்கு கிடைத்த கௌரவமும் மலேசியாவிற்கான் இலங்கை தூதுவர் மேன்மைதாங்கிய ரணதுங்க அவர்கள் எனது சேவையை பாராட்டி பேசியதை என்வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாக உள்ளது.
இரண்டாவது விடயம் 1979களின் பிற்பகுதியிலே மன்னார் பெரியகடைப்பகுதியிலே உள்ள ஒரு பெரிய நீர்த்தேக்கத்தின் கரையுடன் இணைந்த 'புறம்போக்கு' நிலத்திலே, ஒரு சின்னஞ்சிறு ஓலை குடிசையிலே, 'குடிகள் இருக்குமிடத்தில் கோவில் ஒன்று அவசியம்' என ஏற்கனவே சிலரது மனதிலே கருவான சிந்;தனையின் வெளிப்பாடாக உருவானதே 'மன்னார் பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானம்'. யுத்த காலத்திலும் சரி தற்போதும் சரி எல்லாவற்றையும் விட எங்கட ஞானவைரவர் தேவஸ்தானத்தினை பல பிரச்சினைகள் கஸ்ரங்களுக்கு மத்தியில் மதநம்பிக்கையுடனும் கொள்கைப்பற்றுடனும் கௌரவமாக மீட்டெடுத்துள்ளோம். அரசாங்க காணியில் 12 வருடங்களுக்கு மேலாக வழிபாட்டிற்கு உரிமை கொண்ட வணங்;கஸ்தளங்களை கைப்பற்றவோ அகற்றவோ முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இரு வருட காலமாக இந்த ஆலய நிர்வாக சபையினரால் இந்து சமய வளர்ச்சிசங்கம் என்ற நிறுவனத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு அதன் கணக்கு அறிக்கைகளையும் நிர்வாக அறிக்கைகளையும் வழங்கி காணியணைத்தும் சட்டபூர்வமாக ஞானவைரவர்தேவஸ்தான அறங்காவலர் சபைக்கு சொந்தமானதாக அறிவித்தது. அப்போது ளு.ளு. இராமகிருஸ்ணன் அவர்கள் தலைவராக இருந்தார்.
'மன்னார் பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானம்'. உருவாகி அண்ணளவாக மூன்று தசாப்தங்களை நெருங்குகின்ற இன்றைய காலகட்டத்திலே வனப்பும் பொலிவும் நிறைந்த கம்பீரமான தோற்றத்துடன் புதிய கட்டிடத்திலே பிரதிஸ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. என்று சொன்னால், இதனது வரலாறு பத்தோடு பதினொன்றாக எழுதப்படவேண்டிய ஒன்றல்ல என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சைவ சமயத்தவர்களது தன்மானத்தின் சின்னமாகத் தலை நிமிர்ந்து நிற்கும் இந்த ஆலயத்தின் அத்திவாரத்தின் உள்ளே வெறும் கல்லும் மணலும் கொண்ட சீமெந்து கலவை மட்டுமல்ல தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், கடின உழைப்பும், வியர்வையும் எதிர்கொண்ட நெருக்கடிகளும், அவற்றினால்பட்ட அவமானங்களும், அதனால் சுமந்த வலிகளும், வேதனைகளும் கொலை அச்சுறுத்தல்களும், கொலை முயற்சிகளும், விழுப்புண்களும், ஏக்கங்களும், ஏமாற்றங்களும், மௌனமாகச் சிந்தப்பட்ட கண்ணீர்த்துளிகளும் கூடப் புதைக்கப்பட்டுள்ளன என்ற 'செய்தி' வாழும் தலைமுறையான நாம் அறிந்ததுதான் என்றாலும் வருங்காலச் சந்ததியும் தெரிந்து கொள்ளச்செய்ய வேண்டியது எமது தலையாய கடமையாகும்.
எந்தவொரு நல்லவிடயமும் ஆரம்பத்தில் எதிர்ப்பை சந்திக்கும் ஏளனம் செய்து இழிவுபடுத்தப்படும். இவற்றையெல்லாம் தாண்டி இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று சுவாமி விவேகானந்தரது கருத்துக்கு உயிர்கொடுத்து நிதர்சனமாகப் பரிமளித்து இன்று இவ்வாலயம் காட்சிதருகிறது.என்னோடு சேர்ந்து இவ்வாலயச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பலரும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பரிமானங்களில் பல்வேறு பங்களிப்புகளை வழங்கி வந்துள்ளனர். அவர்கள் எல்லாம் போற்றப்பட வேண்டியவர்கள்.கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் .இவ்வாலய வரலாற்றுப்பக்கங்களிலே இடம்பெற வேண்டியவர்கள்.
2050ம்ஆண்டளவில் அமெரிக்கா முழுமையாக இந்து நாடாக மாறிவிடும்(பயபக்தியால்)என பத்திரிகை ஒன்றில் படித்தேன் அதுபோல நமது நாட்டில் மதமாற்றம் பற்றி தங்களின் கருத்து.
அமெரிக்கா ஹாவாய் தீவில் சைவசித்தாந்த பல்கலைக்கழகத்தில் 3வருடங்கள் சைவத்தை பற்றி முறையாக கல்வி கற்று எங்கள் சமயம் சார்ந்த நிறைந்த பரிபூரண அறிவோடு பட்டம் பெற்று இந்து சமயத்தை பற்றி பிரச்சாரம் செய்யக்கூடிய வல்லமையுடன் வெளியேறுகிறார்கள் அங்குள்ள வெள்ளைக்காரர்கள். சைவ உணவையே சாப்பிடுகின்றார்கள். இந்துக் கலாச்சார பண்பாடுகளை இந்துசமய சம்பிரதாயங்களை முறைப்படி பின்பற்றுகின்றார்கள். இப்படியான அமைப்புகள் மூலம் அமெரிக்காவில்; இந்துசமயம் வளர்ச்சியடைந்து வருகின்றது. அத்துடன் இந்தியாவில் உள்ள எத்தனையோ இந்து நிறுவனங்களும் அமெரிக்காவில் இந்து சமயத்தை வளர்க்க அரும்பாடுபடுகின்றனர். இதனால் இந்து மக்களின் விகிதாசாரம் அதிகரிக்க இச்செயற்பாடுகள் துணைபோகின்றன.
மற்ற நாடுகளில் மற்ற சமயத்தினர் மாறுகிறார்கள் என்பதை விட எமது நாட்டில் மதமாற்றம் நடைபெறுகிறது என்றால் காரணம் உண்டு.
யாரும் இனாமாக கொடுக்கும் உணவு, உடை, கல்வி போன்ற சலுகைகளுக்காக இந்துக்கள் மதம் மாறுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள். இதில் எந்தவிதமான உண்மையுமில்லை. இந்துசமயத்தின் மகத்துவம் ,வரலாறு, பழமையினை அறியாமலும் தெரியாமலும் இந்து சமயத்தை பற்றி புரியாமலும் இருப்பவர்கள் தான் மதம் மாறுகிறார்கள். இந்து சமயத்தை பற்றி முறையாக அறிந்;துள்ள எவனும் ஒருபோதும் மதம் மாறமாட்டான் யாராலும் எதைக்கொடுத்தும் மாற்றவும் முடியாது. மற்ற மதத்தவர்கள் தங்கள் கோவில் பூசையில் இன்றைய நற்செய்தி என்ற பெயரில் தங்கள் சமய உண்மைகளை பற்றி மக்களுக்கு போதிக்கின்றார்கள். எங்களுடைய சமயத்தை பொறுத்தவரையில் காலைமுதல் மாலைவரை கோவில்களில் கிரியைகள்தான் நடைபெறுகின்றன. இந்த கிரியைகள் எதற்காக செய்யப்படுகின்றன இதனால் ஏற்படுகின்ற நன்மைகள் என்பதைக்கூட எடுத்து சொல்லும் ஆற்றல் வாய்ந்தவர்கள் இன்று எமது கோவில்களில் காணமுடியாத நிலை உள்ளது.
உதாரணமாக கிறிஸ்த்தவ சமயத்தில் குருவாக போக வேண்டும் என்றால் ஆரம்பத்திலேயே செமினறியில் சேர்ந்து படிக்க வேண்டும் அங்கு கிறிஸ்த்தவம் மட்டுமல்லாது இந்துசமயம் உற்பட ஏனைய சமயங்களையும் கற்றுக் கொடுக்கின்றார்கள் 'உழஅpயசயவiஎந சநடபைழைn ஒப்பீட்டுக்கல்வி மூலம் மற்ற சமயங்களைப்பற்றி அறிந்து கொள்கின்றார்கள். இந்துக்களான நாங்கள் மற்ற சமயங்களை பற்றி மட்டுமல்ல எமது சமயத்தை பற்றியே ஒரு தெளிவான அறிவு பெற்றவர்களாக இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். கோவில்களுக்கு வரும் இந்து மக்களுக்கு பூசை முடிவில் நற்சிந்தனையை சொல்லுவதற்காக திருவிழா காலத்தில் மற்றும் விசேட வைபவங்களிலும் அதற்குரிய பெரியவர்களை அழைத்து ஒரு பத்து நிமிடம் எமது சமயத்தை பற்றிய அறிவை ஊட்டக்கூடிய வகையில் ஞான வைரவர் தேவஸ்தானத்தில் ஆரம்பித்துள்ளோம்.இந்த ஆரம்ப முயற்சி போதவே போதாது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பூசையின் பின்பு அறநெறி பாடசாலை ஆசிரியர்களையோ அல்லது மற்ற சமய பெரியவர்களையோ அழைத்து இந்த பணியை தொடரவேண்டும்.அத்துடன் நித்திய பூசைகளை போன்று நித்திய நற்சிந்தனை சொல்லுவதாக எமது சிறார்களை நாம் உருவாக்க வேண்டும். அவர்களை நாம் பெரிய தத்துவங்களை படிக்கச்சொல்ல வில்லை சித்தாந்தத்தையோ வேதாந்தத்தையோ ஐயன் திரிபுரக் கற்க சொல்லவில்லை எமது சமயத்தில் உள்ள சில அடிப்படை தத்துவங்களையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அவர்கள் படித்த புத்தகத்தில் உள்ள நல்ல விடயம் ஒன்றை பற்றி எடுத்துக் கூறலாம் அல்லது வாசிக்கலாம். அதன் மூலம் அவர்களை கோவிலுக்குள் ஈர்க்ககூடிய தன்மையை உருவாக்குவதுடன் அங்கு வருகின்ற அடியவர்களுக்கு அவ்விடயத்தை தெரிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தையும் தனது சமயத்தை பற்றிய ஒரு அறிவையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். தாகசாந்தி அன்னதானம் போன்ற விடயங்களில் பின்நிற்காத நாங்கள் இந்த அறிவுத்தானத்தை வழங்குவதில் பின் நிற்பதனால் எமது மக்கள் வேறு சமயத்திற்கு மாறுவதற்கு வழியமைத்துக் கொடுக்கின்றோம். இன்று மன்னாரில் அறநெறி பாடசாலை மாணவர்களும் அதன் ஆசிரியார்களும் சைவ சமயத்தை பற்றி பிரச்சாரம் செய்யக்கூடிய அளவிற்கு வளர்ச்சி பெற்றுகொண்டிருக்கிறார்கள்.
அகில இலங்கை இந்து மாமன்றம் நல்லூரில் உள்ள மூன்றுமாடி கட்டிடம் ஒன்றை நிறுவி இந்துப் பிரச்சாரர்கர் கல்லூரி ஒன்றை உருவாக்கி இந்து சமயத்தை பற்றி மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல இந்துப்பிரச்சாரர்களை உருவாக்கி வருகிறது. இதற்கு சைவ ஞான வைரவ செஞ்சொற் செல்வன் ஆறு திருமுருகன் அவர்கள் தலைமையில் பேராசிரியர்கள் உட்பட பல்கலைக்கழக வளதாரிகள் மற்றும் விரிவுரையாளர்கள் ஈடுபாடு கொண்டு செயலாற்றி வருகின்றனர்.இந்த நல்ல முயற்சி தொடர இறைவன் அருள்;பாலிக்க வேண்டும்.
இப்போது மருத்துவத்துறையினை தேர்வு செய்யும் இளைஞர்யுவதிகளுக்கு தங்கள் மருத்துவ அனுபவத்தில் இருந்து –
இந்தத்தொழில் கௌரவமானது கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகின்ற தன்மை முந்தைய காலத்தில் இத்தொழில் சேவையாகத்தான் இருந்தது. தங்கள் சேவையினால் தங்களையும் மருத்துவத்துறையினையும் கௌரவப்படுத்தினார்கள். தற்போதுள்ள மருத்துவர்களை பற்றி நான் எதுவும் சொல்ல விரும்ப வில்லை உங்களுக்கே தெரியும். அண்ட சராசரங்களையும் கட்டிக்காக்கும் முழுமுதற் கடவுளாகிய சிவனுக்கே வைத்திய நாதன் என்ற பெயரும் உண்டு. அதற்கேற்ப மருத்துவ சேவையினையை ஒரு இறைபணியாக கருதி அர்ப்பனசிந்தையுடனும் இரக்க மனப்பான்மையுடனும் தெய்வீகத்தொண்டு உள்ளம் கொண்டும் உன்னதசேவையினை உளமாறப்புரிவோம்.
இதுவரை காலம்; மருத்துவச்சேவையோடு சமயத்தொண்டு பொதுப்பணி செய்து வருகின்றீர்கள் தங்கள் சேவையினை பாராட்டி தந்த விருதுகள் பட்டங்கள் பற்றி-
- இலங்கை பல்கலைக்கழகத்தில் (பேராதெனியா) 01.09.1973ம்; ஆண்டு MBBS பட்டம் பெற்றேன்;.
- 1985ம் ஆண்டு ஆவணி மாதம் ஆஊபுP பட்டம் கிடைக்கப்பெற்றது.
- இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பில் 01.06.1989ம்ஆண்டு னுகுஆ என்ற பட்டப்பின்படிப்பிற்கான சிறப்பு பட்டம் பெற்றேன்.
- 05வது உலக சேக்கிழார் மாநாட்டில் திருத்தொண்டர் மாமணி என்ற பட்டம் 09.09.2005அன்று எனக்கு வழங்கப்பட்டன.
- அவுஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் நடைபெற்ற 10வது உலக சைவ மாநாட்டில் சிவநெறி காவலர் என்ற பட்டம் 29.01.2006அன்று வழங்கப்பட்டன.
- 2006ம் ஆண்டு தேசபந்து பட்டமும்இ விருதும் வழங்கி கௌரவிக்கபட்டேன்.
- சுவீட்ஸ்லாந்தில் சூரிச் மாநகரில் நடைபெற்ற உலக சைவ பேரவை மாநாட்டில் சைவக்காவலன் என்ற பட்டம் 25.05.2007ம் ஆண்டு வழங்கப்பட்டன.
- புதுடெல்லியில் இயங்கி வரும் CBSM Institute of Educaticaion Management & Services என்ற நிறுவனம் Scholar Award என்ற பட்டத்தினை 19.10.2008 அன்று வழங்கி கௌரவித்தது.
- 2008 ம் ஆண்டு நீதி அமைச்சரினால் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டேன்.
- இலன்டனில் நடைபெற்ற பிரித்தானிய சைவத்திரு கோயில்கள் ஒன்றியத்தின் 13வது சைவ மாநாட்டில் சமூக சீலன் என்ற பட்டம் 05.09.2010;ம் ஆண்டு வழங்கப்பட்டன.
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் 07.02.2010 அன்று நடைபெற்ற 12வது உலக சைவ மாநாட்டில் சைவத்தொண்டன் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
- உலக சைவத் திருச்சபையின் கனடா பெரிய சிவன் ஆலய தர்மகர்த்தாவினால் 2014ம் ஆண்டில் நடைபெற்ற சைவத் தமிழ் விழாவில் சைவத்தமிழ் சமூகம் துறை சார்ந்த சேவைகளை பாராட்டி சிவஞான பாரதி எனும் சிறப்பு பட்டம் வழங்கி கௌரவித்தனர்.
- 2014ம் ஆண்டு சர்வதேச இந்து இளைஞர் பேரவை இலங்கை முத்தமிழ் சங்கமத்தினால் சமூகச் சுடர் ஒளி என்ற பட்டம் வழங்கப்பட்டன.
- மன்னார் பெரியகடை ஞான வைரவார் தேவஸ்தான ஆவர்த்தன பிரதிஸ்டா மகாகும்பாபிஷேக நிகழ்வில்(01.02.2015) மன்னார் இந்துக்குருமார் பேரவையால் வைரவ செல்வன் என்ற கௌரவ விருது வழங்கப்பட்டது.
தாங்கள் இதுவரை வகித்த பதவிகள் வகித்துக்கொண்டிருக்கும் தலைமைப்பொறுப்புக்கள் பற்றி-
- 1973.1974ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணவைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக கடமையாற்றினேன்.அதன் பின் கண்டி. நாவலபிட்டி,.மன்னார் வைத்திய சாலைகளிலும் வைத்திய அதிகாரியாகவும் மாவட்ட வைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றினேன்.
- 16 வருடங்களாக யுத்த காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாகவும் இ பிராந்திய மலேரியா தடை வைத்திய அதிகாரியாகவும் தாய் சேய்நல மருத்துவ அதிகாரியாகவும்இபிராந்தியநோய்தடுப்பு வைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றினேன்.
- இலங்கை செஞ்சிலுவைச் சங்க ஆயுள்கால உறுப்பினராகவும் 1989இல் இருந்து 1990 வரை சுகாதார குழு தலைவராக இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவை செய்யும் பாக்கியம் பெற்றேன்.
- இலங்கை இந்திய நற்புறவுச் சங்கம் இ இலங்கை தென்னை அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றில் ஆயுள் கால உறுப்பினராகவும் இருக்கின்றேன்.
- மன்னார் மாவட்டத்தின் கைத்தொழில், வாணிப,, விவசாய நிறுவனத்தின் (CBSM Institute of Educaticaion Management & Services) உபதலைவராக இருக்கின்றேன்.
- 19 வருடங்களாக கௌரவ மருத்துவ பதிவாளராக பிறப்பு,இறப்பு சன்றிதழ் பதிவுகளை செய்து வருகின்றேன்.
- லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் இல்லத்தில் 42 கைவிடப்பட்ட சிறுவர்களை பராமரித்து 18 வயதுக்கு பின் அவர்களின் பாதுகாவலரிடம் கையளிக்கப்பட்டனர்.
- யுத்த காலத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட 33 சிறுவர் சிறுமியர்களை கொண்டு திருக்கேச்சரத்தில்; சிவன் அருள் இல்லம் அமைத்து பொருளாளராக பணியாற்றினேன்
- மனித நேய நம்பிக்கை நிதியத்தின் உதவியுடன் பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் ஒன்றை நிறுவி இலவசமாக தையல் பயிற்சி, பன்னவேலை, அழகுக்கலை, வீட்டுத்தோட்டம் , கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு,சேதனை பசளை தயாரிப்பு, பூச்சி கொல்லி மருந்து போன்றவை இல்லாமல் இயற்கை விவசாயப்பயிற்சி போன்ற பயிற்சிகளை இந்நிலையம் தொடர்ந்து கடந்த 10 வருடங்களுக்கு மேலாக செய்து வருகின்றது.
- இறங்கு துறை இல்லாமல் பேசாலை முருகன் கோவிலடியை சேர்ந்த மீனவ குடும்பங்கள் மீன்பிடிப்பதற்கு வழியற்று பட்டினிசாவை எதிர்கொண்டிருந்த காலகட்டத்தில் 21ஃ2ஏக்கர் காணியை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் மூலம் கொள்வனவு செய்து இவர்களுக்கான மீன்பிடி இறங்குதுறையாகவும் மீனவர் அபிவிருத்திச் நிறுவனமாகவும் செயல்பட வைத்துள்ளேன்.
- சுனாமி ஏற்பட்ட காலப்பகுதியில் எனது தலைமையிலான மருத்துவ குழுவில் நான்கு மருத்துவர்கள், எட்டு தாதிமார் , பத்து பொது சுகாதார மருத்துவ மாதர்கள் , ஐந்து பொது சுகாதார அலுவலகர் , உளவளத்துணையாளர்களுடன் 45 நாட்கள் தொடர்ச்சியாக மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, திருகோணமலை ஆகிய இடங்களில் 01.01.2005 தொடக்கம் 16.02.2005 வரை மருத்து முகாம் அமைத்து சுனாமியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ ரீதியான உதவிகள் பொதுச் சுகாதார ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இவர்களுக்கு 2 இலட்சம் ரூபா பெறுமதியான உணவு உடை போன்றவற்றை அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் என்தலைமையின் ஊடாக இவர்களுக்கு வழங்கப்பட்டது.
- மன்னாரில் 180 சிறுவர்கள், 06 ஆசிரியர்கள் , ஒரு அதிபரின் தலைமையில் கடந்த 29 வருடங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி பாடசாலை இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது.
- மன்னார் மாவட்டத்தில் உள்ள 120 இந்து ஆலயங்கள் இந்து ஆலயங்கள் ஒன்றியத்தின் நிர்வாக திருத்தியமைக்கப்பட்டும் அந்த ஆலயங்களில் எழும் நிர்வாக பிரச்சனைகள் சமூகப்பிரச்சனைகள் போன்றவை தீர்க்கப்பட்டு வருகின்றன.
- ஞான வைரவர் திருமுருகன் தேவஸ்தானத்தில் பொதுச் செயலாளராக ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை இருந்து வருகின்றேன்.
- இந்து சமய அபிவிருத்திச் சங்கத்தின் முன்னால் தலைவராகவும் தற்போதைய போசகராகவும் இருக்கின்றேன்.
- சிவமயம் என்ற காலாண்டு சஞ்சிகை ஆசிரியராக இருந்து கடந்த 11 வருடங்களாக தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றேன்.
- சிறிலங்கா பொலீஸ் ஆலோசனைக் குழுவில் அங்கத்தவராக இருக்கின்றேன்.
- அகில இலங்கை இந்து மாமன்றத்தில் உபதலைவராகவும் கடமையாற்றுகின்றேன்
- அகில இலங்கை இந்து மாமன்றத்தில் சிவதொண்டர் அணி தலைவராக இருக்கிறேன்.
- திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபையின் உபதலைவராக இருக்கின்றேன்.
- ஏடு நிறுவனத்தின் மன்னார் மாவட்டத்தில் செயலாளராக இருக்கின்றேன். தாய் தகப்பன் இருவர்களையும் இழந்த அல்லது தகப்பனை இழந்த இந்த 25 சிறுவர் சிறுமியர்களுக்கு கல்வி கற்பதற்காக ஏடு நிறுவனம் மூலமாக மாதம் 2000ஃஸ்ரீ அவர்களுடைய சேமிப்பு கணக்கில் வைப்பில் இடப்படுகிறது.
- சுவீஸ்லாந்தில் உள்ள அன்பே சிவம் நிறுவனத்தின் ஊடாக போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களுக்கு சுயதொழில் மூலம் வாழ்வாதாரத்ததை மேம்படுத்த உதவிகளை பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.இரண்டு மாதங்களுக்கு முன்பாக சைக்கிள் வேண்ட முடியாத நிலையில் உள்ள 25 பாடசாலை மாணவ மாணவிகளுக்கு இந்த நிறுவனத்தினரால் 25 சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
- 33 வருடமாக மன்னார் லயன்ஸ் கழகத்தில் அங்கத்தவராக இருப்பதோடு தற்போது சர்வதேச லயன்ஸ் கழகங்களில் 306 டீ1மாவட்டத்தின் உலகலாவிய அங்கத்தவர் வளர்ச்சி பிரதேச இணைப்பாளராக இருக்கின்றேன்.
- 1986, 1987 மன்னார் லயன்ஸ் கழக தலைவராக இருந்தேன் அந்த ஆண்டில் மன்னார் லயன்ஸ் கழகம் 13 சேவைத் துறைகளில் துறைசார்ந்த விருதுகள் பெற்று சர்வதேச லயன்ஸ் கழகங்களில் 306 டீமாவட்டத்தின் தலைசிறந்த தலைவராக தெரிவு செய்யப்பட்டேன்.
அதன் பின் Cabinet பதவிகளில் Zone Chairman, Region Charman, District Chairman ,Region Coordinator என்ற சகல பதவிகளிலும் கடந்த 20 வருடமாக பதவி வகித்து வருகின்றேன். ஒவ்வெரு வருடமும் இலங்கையில் நடைபெறும் மாநாடுகளில் இந்த பதவியில் இருந்து சிறப்பாக சேவையாற்றியதற்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தென்கொரியாவில் நடைபெற்ற லயன்ஸ்கழக சர்வதேச மாநாட்டிலும் கலந்து கொண்டேன்.
மன்னார் மக்கள் கலைஞர்கள் சேவையாளர்கள் கல்விமான்கள் என ஒவ்வொருவரையும் அவர்களது திறமை சேவைகளை எடுத்துச்சொல்லும் மன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து-
இதுவொரு புதிய முயற்சி தற்போதைய சூழலில் இவ்வாறான செயற்பாடுகள் பாராட்டுக்குரியது. இலைமறை காயாக இருப்பவர்களையும்இ சேவை செய்பவர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டுவருவதன் மூலம் இன்னும் பலர் தாங்களாக முன் வந்து பொதுச்சேவை செய்ய எத்தனிப்பார்கள் இப்பணிதொடரவேண்டும் என பாராட்டி வாழ்த்துவதோடு உமக்கும் நியூ மன்னார் இணையம் என்றென்றும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீடித்து நிலைக்க இறை ஆசியையும் வேண்டிநிற்கின்றேன்.
மன்னார் இணையத்திற்காக...
வை.கNஐந்திரன்
![]() |
![]() |
2010ம் ஆண்டு நடைபெற்ற இந்து எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய நிகழ்வின் போது |
![]() |
25,26,27-05-2007 ம் அண்டு சுவிற்லாந்து சூரிச் என்ற இடத்தில் நடைபெற்ற 11வது உலக சைவ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது |
![]() |
07.05.2008ம் ஆண்டு தங்கம்மா அப்பாக்குட்டி அவா;களின் நினைவூதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது |
நியூ மன்னார் இணையத்தின் விம்பம் ஊடாக சைவத்தொண்டன் சமூகப்பணியாளன் 42வருட வைத்தியசேவகன் வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன் அவர்களின் அகத்திலிருந்து.
Reviewed by NEWMANNAR
on
July 18, 2015
Rating:

No comments:
Post a Comment