ஐ.தே.மு. 127, ஐ.ம.சு.கூ. 64 ஆசனங்களை பெறும்: ராஜித

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 127 ஆசனங்களை பெற்று வெற்றி பெறும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பயாகல கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எமது முன்னணி மிகவும் பலமானதாக உள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் தற்போதைய நிலைமைக்கமைய 127 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 64 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 10 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் 10 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும்.
ஐ.தே.மு. 127, ஐ.ம.சு.கூ. 64 ஆசனங்களை பெறும்: ராஜித
Reviewed by Author
on
July 18, 2015
Rating:

No comments:
Post a Comment