தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 115 முறைப்பாடுகள்
தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் 115 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பொதுச் சொத்துக்கள் பயன்பாடு, அரச ஊழியர்கள் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான எழுபது முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் அந்தச் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்யக் கூடாது என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 115 முறைப்பாடுகள்
Reviewed by NEWMANNAR
on
July 11, 2015
Rating:

No comments:
Post a Comment