அரச உதவி முகாமையாளர் சேவைக்கு 4000 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானம்
அரச உதவி முகாமையாளர் சேவைக்கு 4000 பேரை இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பல கட்டங்களின் கீழ் புதிய சேவையாளர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்.
அரச உதவி முகாமையாளர் சேவையாளருக்கான தேர்வு பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சை நடத்தவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாதம் முதல்வாரத்தில் இடம்பெறும் எனவும் அரச நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச உதவி முகாமையாளர் சேவைக்கு 4000 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானம்
Reviewed by NEWMANNAR
on
July 19, 2015
Rating:

No comments:
Post a Comment