அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்வது அனைவரதும் கடமை!- சிவிகே சிவஞானம்


இரு தேசிய இனங்கள் ஒரு நாடு என்ற கொள்கையை நோக்கிய பயணத்தில் செல்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்வது அனைவரதும் கடமை என வடமாகாண சபையின் அவைத் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான சிவிகே சிவஞானம் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசாவின் உத்தியோகபுா்வமாக தேர்தல் துண்டுப்பிரசுரம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டுடன் ஆரம்பமாகி மக்களிடம் விநியோகித்து கருத்து தெரிவிக்கையில் அதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்>

அரசியல் தீர்விற்கு வழமை போன்று தன்னாட்சி என்று கூறக்கூடிய கூட்டாட்சியை நோக்கி நகர்கின்ற அரசியல் தீர்விற்கும், வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்தை நிலைப்படுத்தியதாக இருக்கக் கூடியதாகவும், சர்வதேசத்தினால் கூறப்படுகின்ற சிவில் மற்றும் அரசியல் சார்ந்த சமவாயத்தில் கூறப்படுவது போன்று மக்களில் தான் சுயநிர்ணய உரிமை தங்கியிருக்கிறது என்பதற்கமைய தமிழ் தேசிய இனம் தனி இனமாகவும் சிங்கள தேசிய இனம் இன்னுமொரு இனமாகவும் இரு தேசிய இனங்கள் இணைந்த இரு தேசிய இனங்கள் ஒரு நாடு என்ற கொள்கையை நோக்கி சர்வதேச சட்டங்களை நோக்கிச் செல்வதற்கான ஆரம்பப் புள்ளியாக இது இருக்க நாம் அனைவரும் ஒன்று திரண்டு கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் 7 ஆசனங்களை வெல்லக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது.

இதன்மூலம் நாங்கள் எதிர்பார்த்த, செய்துவந்த காரியங்கள் குறிப்பாக தமிழ் மக்களது சொந்த நிலங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்,

இடம்பெயர்ந்து அகதி வாழ்வு வாழும் மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் குடியேற வேண்டும்.

மேலும் சிறைச்சாலைகளில் எந்தவித விசாரணைகளுமின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவும், யுத்தப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொடுக்கவும், எமது மக்களிற்கான தொழில் துறைகளை ஆரம்பிப்பதற்கான பொருளாதார மேம்பாட்டினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டும் என்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்வது அனைவரதும் கடமை!- சிவிகே சிவஞானம் Reviewed by NEWMANNAR on July 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.