அழிவடைந்து வரும் கடற்பறவைகளும் பாழாகிவரும் உயிர்ச்சூழலும்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வுக்குழு மேற்கொண்ட ஆய்வில் கடந்த 60 ஆண்டுகளில் கடற்பறவைகளின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைவடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வுக் குழுவினால் உலகிலுள்ள கடற்பறவைகளின் 19 சதவீத இனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு கண்காணிப்பிற்குள்ளான பறவைகளின் எண்ணிக்கை, கடந்த 60 ஆண்டுகளில் 69.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதாவது, 23 கோடி பறவைகள் அழிவைச் சந்தித்துள்ளன.
கடல் பகுதியில் உயிர்ச்சூழல் அமைப்பு பாழாகி வருவதையே கடல்பறவைகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருப்பது காட்டுகிறது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழிவடைந்து வரும் கடற்பறவைகளும் பாழாகிவரும் உயிர்ச்சூழலும்
Reviewed by NEWMANNAR
on
July 11, 2015
Rating:

No comments:
Post a Comment