அண்மைய செய்திகள்

recent
-

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையொட்டி 7 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பு


இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மறைவையொட்டி 7 நாட்கள் துதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) காலை அவரது உடல் டெல்லிக்குக் கொண்டு செல்லப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்துல் கலாமின் மறைவையடுத்து பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இயற்கை எய்திய இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் தலைசிறந்த விஞ்ஞானியுமான அப்துல் கலாமிற்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தனது 83 ஆவது வயதில் இவ்வுலகை நீத்தார்.

இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாகவும் இந்த நூற்றறாண்டின் தலைசிறந்த கல்விமான்களில் ஒருவராகவும் தன்னை நிலைநிறுத்திய கலாநிதி அப்துல் கலாமின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அப்துல் கலாம் நண்பன் மற்றும் மக்களின் ஜனாதிபதி எனவும் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானம் மற்றும் கண்டுபிடிப்புகளில் அவர் கொண்ட ஆர்வம் எப்போதும் அவரை எமது நினைவில் இருத்தும் என முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையொட்டி 7 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பு Reviewed by NEWMANNAR on July 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.