அமெரிக்காவில் போதைப் பொருளுடன் சிக்கிய ராகுல் காந்தி:சுப்ரமணியன் சாமி பரபரப்பு!
அமெரிக்காவில் போதைப் பொருளுடன் ராகுல் காந்தி போலீசாரிடம் பிடிபட்டார் என்றும் அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பாய் தான் நடவடிக்கை எடுத்துக் காப்பாற்றினார் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி திடுக்கிடும் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி இரண்டாவது நாளாக நடந்து வருகிறது. கூட்டத்தில் வியாபம் ஊழல், லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே உதவி செய்த விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து நாடாளுமன்றத்தை முடக்குவதில் காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறது.இதனால் அவை நடவடிக்கைகள் அவ்வப்போது முடங்கி வருகின்றன.
இந்நிலையில்,சுப்பிரமணியன் சுவாமி புதிய சர்ச்சைக்குரிய தகவலை வெளியிட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்க புலனாய்வு பிரிவு போலீசாரிடம் 1.60 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் வெள்ளை பவுடருடன் சிக்கிக் கொண்டார். அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயிடம், இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார். பின்னர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் வாஜ்பாய் தொலைபேசியில் பேசினார். பின்னரே ராகுல் காந்தி விடுதலை செய்யப்பட்டார். என்று கூறியுள்ளார். இந்தி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சாமி இதனைக் குறிப்பிட்டு உள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலம் முதல்வர் வசுந்தரா ராஜேவை ‘ஜான்சி ராணி’ என்று பாராட்டிஉள்ள சுப்பிரமணியன் சாமி, தனது சொந்த திறமையால் எந்த ஒரு சர்ச்சையையும் எதிர் கொள்வார் என்று கூறியுள்ளார். “ராஜே ஜான்சி ராணி ஆவார், அவரால் அவரை பாதுகாத்துக் கொள்ளமுடியும், அவருக்கு தேவைபடுமாகின் நான் அவருக்கு உதவிசெய்வேன். அவருக்கு யாருடைய உதவியும் தேவைப்படாது,” என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
மனிதாபிமான முறையில் வசுந்தரா ராஜே தனது முன்னாள் நண்பருக்கு உதவிசெய்து உள்ளார், இது ஒன்றும் குற்றம் கிடையாது. என்று கூறிய சுப்பிரமணியன் சாமி, ராஜேவின் மகன் துஷ்யாந்த் சிங் மீது எழுந்து உள்ள குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு " துஷ்யாந்த் சிங் ஏதேனும் தவறு செய்து இருந்தால், ஏன் காங்கிரஸ் கட்சி அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்லவில்லை, அவருடைய குற்றத்தை ஏன் நிரூபிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் போதைப் பொருளுடன் சிக்கிய ராகுல் காந்தி:சுப்ரமணியன் சாமி பரபரப்பு!
Reviewed by NEWMANNAR
on
July 22, 2015
Rating:

No comments:
Post a Comment