யாழில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம்: ஓய்வு பெற்ற அதிபர் விளக்கமறியலில்
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் ஐவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதான ஓய்வுபெற்ற அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பருத்தித்துறை நீதவான் ம. கணேசராசா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐந்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம்: ஓய்வு பெற்ற அதிபர் விளக்கமறியலில்
Reviewed by NEWMANNAR
on
July 04, 2015
Rating:

No comments:
Post a Comment