வருடாந்தம் 80 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்த ஆனையிறவு உப்பளம் புனரமைக்கப்படுமா?
1938 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்த ஆனையிறவு உப்பளம் யுத்தம் காரணமாக செயலிழந்தது.
கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் ஆனையிறவு உப்பளத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவினால் 100 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்ட போதிலும் இதுவரை புனரமைப்புப் பணிகள் நிறைவு பெறவில்லை.
வருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் உப்பை உற்பத்தி செய்யும் நோக்கில் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட முயற்சி இதுவரை பலனளிக்கவில்லை.
வருடாந்தம் 60 ஆயிரம் தொடக்கம் 80 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்த ஆனையிறவு உப்பளம் செயற்படுத்தப்படுமாயின் தொழில் வாய்ப்புக்கள் மாத்திரமல்லாது, உப்பினை ஏற்றுமதி செய்து நாட்டின் வருமானத்தையும் அதிகரிக்க முடியும்.
நாட்டில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிய பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை இயங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
யுத்தம் நிறைவுபெற்று நாட்டில் சமாதானம் உருவாகிவிட்டதாகக் கூறப்படுகின்றபோதிலும் யுத்தச் சான்றுகளாக சில இடங்கள் நினைவுகூரப்படுகின்றன.
கிளிநொச்சியின் ஏ9 வீதி புனரமைக்கப்பட்டு சிறந்த முறையில் போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும், உள்ளூர் வீதிகள் புனரமைக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வருடாந்தம் 80 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்த ஆனையிறவு உப்பளம் புனரமைக்கப்படுமா?
Reviewed by NEWMANNAR
on
July 04, 2015
Rating:

No comments:
Post a Comment