100 வயதில் கர்ப்பமா? அதிர்ச்சியடைந்த பாட்டி...விழுந்து விழுந்து சிரித்த மகன்கள்

100 வயதில் தான் கர்ப்பமாக இருப்பதாக வந்த தகவலை கேட்ட மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிரித்தானியாவின் ஹேம்ப்ஷைர் நகரில் வசித்து வருபவர் டோரிஸ். 100 வயதான இவருக்கு கடந்த மாதம் சூஸெக்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் கடிதம் ஒன்றை அனுப்பியது.
அதில் டோரிஸ் கர்ப்பமாக இருப்பதாகவும் இது தொடர்பான மருத்துவ அறிக்கைகளையும், சிறுநீரையும் கொண்டு வந்து பரிசோதனை குறித்து மருத்துவரை சந்திக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த டோரிஸ் தனது மகன்களிடம் தெரிவிக்க அவர்கள் விழுந்து சிரித்துள்ளர், மேலும் பேரக்குழந்தைகள் வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
இது பற்றி மருத்துவமனைக்கு தகவலளித்த போது, டோரிஸ் என்ற பெயர் கொண்ட வேறு ஒரு பெண்ணுக்கு அனுப்பவேண்டியதை இவருக்கு அனுப்பியதே இதற்கான காரணம் என தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
100 வயதில் கர்ப்பமா? அதிர்ச்சியடைந்த பாட்டி...விழுந்து விழுந்து சிரித்த மகன்கள்
Reviewed by Author
on
July 22, 2015
Rating:

No comments:
Post a Comment