அண்மைய செய்திகள்

recent
-

உலகின் அதிர்ஷ்டகார மனிதர்: பணமழையில் நனைந்த அதிசயம்


கனடாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு லாட்டரியில் நான்கு கோடியே தொண்ணூறு லட்ச ரூபாய் கிடைத்துள்ளதால் அவர் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார்.
கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணத்தை சேர்ந்த பீட்டர் மெக்கேத்தி என்பவர் தான் வேலைபார்க்கும் Amherst Shore என்ற கடையில், தன்னுடன் வேலைபார்க்கும் டயானா மில்லர் என்பவருடன் இணைந்து லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.

அதில் இவருக்கு நான்கு கோடியே தொண்ணூறு லட்ச ரூபாய் பரிசு கிடைத்துள்ளது, டயானா மில்லருக்கு பத்தாயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.

தற்போது இவரை உலகின் அதிர்ஷ்டகார மனிதர் என்று அழைக்கின்றனர், ஏனெனில் தனது வாழ்நாளில் இரண்டு முறை இடி, மின்னல் தாக்கியும் உயிர்பிழைத்துள்ள இவருக்கு அடுத்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

மேலும் இவரது மகளும் மின்னல் தாக்கி உயிர்பிழைத்துள்ளார், தற்போது இவ்வளவு தொகை இவருக்கு பரிசாக கிடைத்துள்ளதால் தனது பணியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கூறியுள்ளார்.

மேலும், தனக்கு மிகவும் பிடித்த தொழிலான சமையல் மற்றும் மீன்பிடி தொழிலை செய்யப்போவதாக கூறியுள்ளார்.

உலகின் அதிர்ஷ்டகார மனிதர்: பணமழையில் நனைந்த அதிசயம் Reviewed by Author on July 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.