அண்மைய செய்திகள்

recent
-

புளூட்டோ கிர­கத்தின் அதி துல்­லி­ய­மான புகைப்­ப­டங்கள்


புளூட்டோ கிர­கத்தைக் கடந்துசென்­றுள்ள 'நியூ ஹொரிஸன்' விண்­க­ல­மா­னது அக்­கி­ர­கத்­தி­லுள்ள 11,000 அடி உய­ர­மான பாரிய மலைப் பிராந்­தி­யத்தை துல்­லி­ய­மாக புகைப்­ப­ட­மெ­டுத்­துள்­ளது.

மேற்­படி புகைப்­ப­டங்கள் புளூட்டோ கிரகம் தொடர்பில் இதற்கு முன் எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களை விடவும் 10 மடங்கு துல்­லி­ய­மா­ன­தாகும்.

'நியூ ஹொரிஸன்' விண்­கலம் அந்தக் கிர­கத்­துக்கு 12,500 கிலோ­மீற்றர் தொலைவில் பறந்து இந்தப் புகைப்­ப­டங்­களை எடுத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­துடன் புளூட்­டோவின் சந்­தி­ரன்­க­ளான சரொன் மற்றும் ஹைட்ரா ஆகி­ய­வற்றின் புகைப்­ப­டங்­க­ளையும் அந்த விண் ­கலம் எடுத்து பூமிக்கு அனுப்பிவைத்­துள் ­ளது.

இந்­நி­லையில் அந்த விண்­க­லத்தால் எடுக்­கப்­பட்­டுள்ள புளூட்­டோவின் மலைப் பிராந்­தி­ய­மா­னது கடந்த 100 மில்­லியன் ஆண்­டு­க­ளுக்குள் உரு­வா­கி­யுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது. அத்­துடன் அங்கு பண்­டைய காலத்தில் மேற்­ப­ரப்பு நீர் மற்றும் ஈர்ப்புத்தன்மை இருந்தமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
புளூட்டோ கிர­கத்தின் அதி துல்­லி­ய­மான புகைப்­ப­டங்கள் Reviewed by Author on July 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.