அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிட சந்திரிக்கா தீர்மானம்
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பு மனு வழங்க இணங்கியுள்ளதை தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு அனேகமானோர் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்சவின் தன்னிச்சையான அரசாங்க ஆட்சியை கவிழ்க்க பாரிய திட்டங்களை மேற்கொண்டு சந்திரிக்கா குமாரதுங்க முன்னின்று செயற்பட்டார்.
கடந்த ஜனவரி மாதம 8ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கவும் ராஜபக்சர்களை ஒழித்துக் கட்டவும் முன்னிற்று செயற்பட்ட சந்திரிக்கா குமாரதுங்க, இம்முறை அன்னப் பறவைச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிட சந்திரிக்கா தீர்மானம்
Reviewed by NEWMANNAR
on
July 04, 2015
Rating:

No comments:
Post a Comment