தொடர்ச்சியாக உடைக்கப்படும் ஆலயங்கள் -லிந்துலையில் ஆலயம் உடைக்கப்பட்டு பெறுமதிமிக்க பொருட்கள் திருட்டு
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய மட்டுக்கலை தோட்ட ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் ஆலயத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த பெறுமதிமிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளது.
இவ் ஆலயத்தில் கடந்த மாதம் 22ம் திகதி மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.
நேற்று தினம் 42வது நாள் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின் தோட்ட பொது மக்கள் ஆலயத்திலிருந்து இரவு 12 மணியிளவில் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார்கள்.
இந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் ஆலய பகுதிக்கு அவ்வழியாக சிலர் சென்றுள்ளனர்.
அதன்போது ஆலயத்தில் உள்ள கம்பிகள் உடைக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளனர். அவர்கள் தோட்ட பொது மக்களுக்கு இவ்விடயத்தை தெரிவித்துள்ளனர்.
அதன்பின் தோட்டத்தில் உள்ள மக்கள் ஆலயத்தில் ஒன்று கூடியுள்ளனர். ஜன்னல் வழியாக இனந்தெரியாத நபர்கள் உள்ளே சென்று ஆலயத்தின் உண்டியலையும், ஒலி பெருக்கி சாதனங்கள் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த பெறுமதிமிக்க ஆபரணங்களும் திருடப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக உடைக்கப்படும் ஆலயங்கள் -லிந்துலையில் ஆலயம் உடைக்கப்பட்டு பெறுமதிமிக்க பொருட்கள் திருட்டு
Reviewed by NEWMANNAR
on
July 04, 2015
Rating:

No comments:
Post a Comment