அண்மைய செய்திகள்

recent
-

இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினை பெரிய பிரச்சினையாக உள்ளது-வேட்பாளர் எஸ்.டிலான்.

எதிர்வரும் பாராளுமன்ற புதிய அமர்வின் போது புதிதாக தேர்தலில் போட்டியிட்டவர்ளையும் பாராளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பி வைக்கின்ற போது எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் (UPFA) வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் மன்னார் மாவட்ட வேட்பாளரான செல்வக்குமரன் டிலான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் (UPFA) வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்தில் தமிழ்  வேட்பாளராக என்னை களமிறக்கியுள்ளனர்.

கடந்த கால தேர்தல்களில் பல அரசியல் வாதிகள் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர்.அவர்கள் இப்போதும் உள்ளனர்.

அவர்களின் சேவைகளுக்கு அப்பாற்பட்ட எதை செய்தார்கள்,எதை செய்யவில்லை என கூற விரும்பவில்லை.
இனி வருகின்ற பாராளுமன்றத்திற்கு புதிதாக தேர்தலில் போட்டியிட்டவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பி வைக்கின்ற போது எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய நிலை ஏற்படும்.

மன்னார் மாவட்டத்தில் 75 வீதமானோர் கடற்தொழிலை மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.குறிப்பாக இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினை பெரிய பிரச்சினையாக உள்ளது.

இது வரை இந்திய மீனவர்களுக்கு இடையிலும்,இலங்கை மீனவர்களுக்கு இடடையிலும் சரியான புரிந்துனர்வு ஒப்பந்தங்கள் எவையும் இடம் பெறவில்லை.
இதனால் இரு நாட்டு மீனவர்களும் அதிகலவில் பாதீக்கப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கை மீனவர்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் மீனவ சமூகத்தில் இருந்து ஒருவரை கட்டாயமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டிய ஒரு கட்டாய கடமை இருக்கின்றது.

அந்த இடத்திலே கதைக்க வேண்டிய ஒரு தேவைப்பாடு இருக்கின்றது.

ஆகவே நடை பெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மீனவ சமூகத்தில் இருந்து ஒருவரை அனுப்பி வைக்கின்ற போது மீனவர்களின் மாணியப்பிரச்சினையாக இருந்தாலும் சரி,எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் கூடுதலாக கதைக்கக்கூடிய சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம் என்ற சந்தோசம் மக்களுக்கு கிடைக்கும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினை பெரிய பிரச்சினையாக உள்ளது-வேட்பாளர் எஸ்.டிலான். Reviewed by NEWMANNAR on July 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.