அண்மைய செய்திகள்

recent
-

த.தே.கூ.வின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்...


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சி.சிவமோகனின் ஆதரவாளர்கள் மீது மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்கு அண்மித்ததாக கண்டி வீதி வழியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிவமோகனின் ஆதரவாளர்களான இளைஞர்கள் சிலர் நடந்து வந்துள்ளனர்.

இதன் போது பாடசாலை விட்டு அவ் வீதி வழியாக பாடசாலை சீருடையுடன் வந்த மாணவர்கள் சிலர் பலர் முன்னிலையில் அந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தமது சைக்களில் தப்பியோடியுள்ளனர்.

பாடசாலை வீதிக் கடமையில் நின்ற பொலிஸாரிடம் இதுகுறித்து உடனடியாகவே பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரியப்படுத்தியபோதும் பொலிஸார் அதனை கண்டுகொள்ளவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த வேட்பாளர் சிவமோகன் குறித்த இளைஞர்களை அங்கிருந்து அழைத்து சென்றுள்ளார். 

த.தே.கூ.வின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்... Reviewed by Author on July 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.