நேர்த்தியானவர்களை தேசிய பட்டியலில் தெரிவு செய்யுங்கள் : கபே
தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் போது ஊழல் மோசடிகாரர்களுக்கு இடமளிக்க கூடாதென கபே இயக்கம் அறிவித்துள்ளது.
மேலும், பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் இதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் நிதி மோசடி மற்றும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியோர், தேர்தல் சட்டத்தை மீறியோர், சுற்றாடல் அழிவினை மேற்கொண்டோர், நிதியினை பதுக்குபவர் போன்ற தரப்பினருக்கு தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல இடமளிக்காமல் நேர்த்தியானவர்களை தெரிவு செய்யுங்கள் என கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேர்த்தியானவர்களை தேசிய பட்டியலில் தெரிவு செய்யுங்கள் : கபே
Reviewed by Author
on
August 14, 2015
Rating:

No comments:
Post a Comment