அண்மைய செய்திகள்

recent
-

மனைவி பிள்ளைகள் சுகபோகம்: வறுமை பெண்கள் பிரசார பணியில்: செல்வம் காட்டம்.


தமிழர்களின் வறுமையை பயன்படுத்தி வன்னியில் உள்ள அமைச்சர் ஒருவர் எங்கள் சகோதரிகளை பிரசாரத்துக்கு பயன்படுத்தும் கேவலமான நிலை உருவாகியுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்க தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இங்குள்ள அமைச்சரொருவர் மனைவி பிள்ளைகள் உறவுப்பெண்கள் சுகபோகம் அனுபவிக்க எங்கள் தமிழ் பெண் பிள்ளைகள் கடும் வெயிலிலும் பிரசாரத்துக்காக பயன்படுத்தி வருகின்றார்.

அவர்களின் வறுமையை பயன்படுத்தி தையல் மெசின், தொண்டர் ஆசிரியர் நியமனம், அரச தொழில்வாய்பபு என்று ஆசை வார்த்தைகளை காட்டி தனது வெற்றிக்காக பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகின்றமை வேதனைக்குரியது.

ஒரு இனத்தின் வறுமையை இன்னொரு இனத்தவாகள் சாதகமாக பயன்படுத்துவது வன்னி தோதல் தொகுதியில் மிக மோசமாக இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் எங்கள் சமூகத்தை சேர்ந்த படித்த பல பட்டதாரிகளை இதுவரை வேலையில்லாமல் வைத்திருந்து தேர்தலில் பின்னர் வேலைவாய்ப்பு தருவதாக தெரிவித்து தேர்தலுக்காக பயன்படுத்துகின்றனர். அவர்களில் பெண் பிள்ளைகளும் சென்று வருவது கவலைக்குரிய விடயமாகும்.

எங்கள் மக்கள் இதில் தெளிவாக இருக்க வேண்டும். இவாகள் தரும் தையல் மெசினும் சைக்கிளும் எங்கள் மக்கள் இடம்பெயர்ந்து மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்தபோது உழைத்த பணத்தில் வருகின்றது.

எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் விட்டு வந்த இரும்பை ஏற்றிச்சென்று பெ;ற பணத்தில் வருகின்றது. எனவே எங்கள் மக்கள் தருவதெல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் எமது சகோதரர்களும் சகோதரிகளும் மண்ணுக்காகவும் எங்கள் உரிமையை பெற்றிடவும் மாவீரர்கள் ஆகியதை இறுதி வரை மறந்திடாமல் எங்கள் உரிமையை பெற்று அவர்களுக்கு சமர்ப்பிப்பதற்காக எமக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்

மனைவி பிள்ளைகள் சுகபோகம்: வறுமை பெண்கள் பிரசார பணியில்: செல்வம் காட்டம். Reviewed by Author on August 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.