அண்மைய செய்திகள்

recent
-

பாலியலுக்கு மறுத்த 19 பெண்­க­ளுக்கு மர­ண­தண்­டனை...

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், தமது குழுவைச் சேர்ந்த உறுப்­பி­னர்­க­ளுடன் பாலி யல் உறவை வைத்துக் கொள்ள மறுத்த 19 பெண்­க­ளுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்றியுள்ளதாக குர்திஷ் ஜன­நா­யகக் கட்­சியின் பேச்­சா­ள­ரான செயித் மிமோ­ஸினி தெரி­வித்­துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் கைப்­பற்­றப்­பட்ட ஈராக்­கிய மொசூல் நகரில் அந்தப் பெண்கள் பண­யக்­கை­தி­க­ளாக பிடித்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் பாலி­ய­லுக்­காக பெண்கள் விற்­கப்­ப­டு­வது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்ள ஐக்­கிய நாடுகள் பிர­தி­நி­தி­யொ­ருவர் கூறு­கையில், பெண்கள் பெற்றோல் பீப்­பாக்கள் போன்று விற்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் இதன் போது விற்­கப்­படும் பெண்­ணொ­ரு­வரை 6 வெவ்­வேறு ஆண்கள் வாங்க முடி­வ­தா­கவும் தெரி­வித்தார்.

கடந்த வருடம் வட ஈராக்­கிய நக­ரான சின்ஜார் மாவட்­டத்­துக்குள் ஊடு­ரு­விய ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், யஸிடி சமூ­கத்தைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான பெண்­களை பண­யக்­கை­தி­க­ளாக பிடித்துச் சென்­றி­ருந்­தனர்.

இதன் போது தப்பி வந்த சில பெண்கள், தாம் தம்மை உடல் ரீதி­யா­கவும் பாலியல் ரீதி­யா­கவும் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கிய தீவி­ர­வாத குழு உறுப்­பி­னர்­களைத் திரு­மணம் செய்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்­ளனர்.

இந்நிலையில் மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு உட்படுத்தப் பட்ட 19 பெண்களும் யஸிடி இனத்தவர்களா இல்லையா என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

பாலியலுக்கு மறுத்த 19 பெண்­க­ளுக்கு மர­ண­தண்­டனை... Reviewed by Author on August 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.