அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியம் 10ம் திகதி முதல் வழங்கப்படும்...
500 மில்லியன் ரூபா திறைசேரி ஒதுக்கீடு
ரூ2500 முதல் ரூ10,000 வரை அதிகரிப்பு...
ஓய்வூதியக் கொடுப்பனவில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட விருப்பதாக ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிகரித்த ஓய்வூதியத்தை வழங்குவதற்காக திறைசேரி 1500 மில்லியன் ரூபாய்களை திணைக்களத்துக்கு விடுவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு ஓய்வூதியக் கொடுப்பனவு முரண்பாடு தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டது. இது தொடர்பில் 6/2006 சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த முரண்பாட்டைத் தீர்க்கும் நோக்கில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அதிகரித்த ஓய்வூதியத்தை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய அரசசேவையிலிருந்து ஓய்வுபெற்ற 337,000 பேர் நன்மையடையவுள்ளனர். 2015/06/25 வெளியிடப்பட்ட 16/2015 என்ற நிர்வாக சுற்றுநிருபத்தின் கீழ் அதிகரித்த ஓய்வூதியக் கொடுப்பனவை 2015/7/1 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்குமாறு பணிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய ஓய்வூதியம் பெறுபவர்கள் 2500 ரூபா முதல் 10,000 ரூபாவரை அதிகரித்த ஓய்வூதியத்தைப் பெறவிருப்பதாக ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியம் 10ம் திகதி முதல் வழங்கப்படும்...
Reviewed by Author
on
August 09, 2015
Rating:

No comments:
Post a Comment