அண்மைய செய்திகள்

recent
-

தகுதியானவர்களை மட்டுமே தெரிவு செய்யுங்கள் : ஜனாதிபதி வேண்டுகோள்...


எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் பாரா­ளு­மன்­றத்­திற்கு பொருத்­த­மா­ன­வர்­களை மட்­டுமே தெரிவு செய்ய வேண்­டி­யது நாட்டில் உள்ள எல்லா வாக்­கா­ளர்­க­ளி­னதும் மிகப் பெரும் பொறுப்­பாகும் என்று ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தின் நற்­பெ­யரை மதித்து பாது­காக்­கின்ற மற்றும் நாட்­டுக்­காக பணி செய்­யக்­கூ­டிய மிகப் பொருத்­த­மான வேட்­பா­ளர்­களை மட்­டுமே தேர்­தலில் தெரிவு செய்ய வேண்டும் என்றும் ஜனா­தி­பதி குறிப்பிட்டார்.

கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று இடம்­பெற்ற அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்­கவின் இரண்டு நூல்­களை வெளியிட்ட வைக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே ஜனா­தி­பதி இதனைத் தெரி­வித்தார்.

சர்­வ­தேச அரங்கில் ஒரு இலங்­கை­யரின் குரல் என்ற சிங்­கள மொழி மூல­மான நூலும் அந்த நூலின் ஆங்­கிலப் பிர­தியுமே அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்கவினால் வெ ளியிடப்பட்டது. பாரா­ளு­மன்­றத்­திலும் சர்­வ­தேச மனித உரி­மைகள் பேர­வை­யிலும் ஏனைய விசேட சந்­தர்ப்­பங்­க­ளின்­போதும் மஹிந்த சமரசிங்க ஆற்­றிய உரை­களை இந்த நூல் உள்­ள­டக்­கி­யுள்­ளது.

நிகழ்வில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்
மக்கள் தங்­க­ளது அறிவு, புத்­திக்­கூர்மை மற்றும் வேட்­பா­ளர்கள் தொடர்­பான முன் அனு­ப­வங்­களை வைத்து தெரிவை மேற்­கொள்ள வேண்டும்.

அர­சி­யல்­வா­திகள் மக்­க­ளுக்­கான தங்­க­ளது கடமைப் பொறுப்­புக்­களை முறை­யாக நிறை­வேற்­றாத கார­ணத்­தினால் அவர்­க­ளது நன்­ம­திப்­புக்கு களங்கம் ஏற்­பட்­டுள்ளது.

அர­சி­யல்­வா­திகள், அர­சாங்க ஊழி­யர்கள் மற்றும் இரா­ஜ­தந்­தி­ரிகள் அவர்­க­ளது பத­வி­களின் கடமைப் பொறுப்­புக்­களை ஏற்­கின்­ற­போது மக்­களின் அபிலாஷைகளை நிறை­வேற்­று­வ­தற்கு எப்­பொ­ழுதும் அர்ப்­ப­ணத்­துடன் செயற்­பட வேண்டும்.

அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தனது அறிவு, ஆற்றல் மற்றும் அனு­ப­வங்­களைப் பயன்­ப­டுத்தி தேசிய ரீதி­யா­கவும் சர்­வ­தேச ரீதி­யா­கவும் செய்­துள்ள சேவைகள் பாராட்டத்தக்கவை. அத்­தோடு அமைச்சர் சம­ர­சிங்­கவின் எதிர்­கால முயற்­சிகள் வெற்­றி­பெற வாழ்த்துகின்றேன் என்றார்.

நிகழ்வில் கலா­நிதி இத்­தே­பானே தம்­மா­லங்­கார நாயக்க தேரர் உள்­ளிட்ட மகா சங்­கத்­தினர், அமைச்­சர்­க­ளான ஏ.எச்.எம்.பௌசி, ரவி கரு­ணா­நா­யக்க, டபிள்யு.ஜே.எம். லொக்கு பண்டார, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், பாதுகாப்பு செயலாளர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க ஆகியோரும் வெளிநாட்டுத் தூதுவர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தகுதியானவர்களை மட்டுமே தெரிவு செய்யுங்கள் : ஜனாதிபதி வேண்டுகோள்... Reviewed by Author on August 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.