மன்னாரில் காணியை கடற்படையினர் அபகரிக்க முயற்சி...
மன்னார் பேசாலை வெற்றிமாங்குடியிருப்பு கிராமத்தில் உள்ள 3 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியை கடற்படையினர் அபகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பேசாலை சென்.-விக்டரிஸ் ஆலய அருட்பணி பேரவையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பேசாலை சென்-.விக்டரிஸ் ஆலய அருட்பணி பேரவையினர் மன்னார் பிரஜைகள் குழுவின் கவனத்திற்கு நேற்றுக் கொண்டு வந்துள்ளதோடு முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடுகையில்,
பேசாலை கிராமத்தின் மேற்குப் பக்கமாக பேசாலையில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சுமார் 210 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட வெற்றிமாங்குடியிருப்பு என்றழைக்கப்படும் இக்காணி பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்திற்குச் சொந்தமானது.
இக்காணிக்கான உறுதி, நில அளவைப்படம், வரலாற்றுத்தாள் போன்ற ஆவணங்கள் மன்னார் மறைமாவட்ட ஆயரின் பெயரில் எம்மிடம் உள்ளது.
சுமார் 10 வருடங்களுக்கு முன் இங்கு வந்த கடற்படையினர் இங்கு படைமுகாம் ஒன்றை அமைக்க முற்பட்டபோது பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய அருட்பணிச் சபையினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து படைமுகாம் ஒன்றை குறித்த கோயில் காணியில் அமைப்பதை தடுத்தனர்.
இந்த நிலையில் இப்பணிக்கு பொறுப்பாக வந்திருந்த கடற்படை பொறுப்பதிகாரி எமது கிராமத்தின் முன்னாள் பங்குத்தந்தை யுடன் இணக்கமாக நட்புறவுடன் உரையாடி தாங்கள் தற்காலிகமாக சிறிது காலம் இங்கு இருப்போம் என்றும் பொருத்தமான ஒரு இடத்தைக் கண்டுபிடித்தவுடன் இங்கிருந்து இடம்மாறி விடுவோம் என்று தெரிவித் தார்.
இந்த நிலையில் எமது பங்குத்தந்தை மற்றும் மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் ¾ ஏக்கர் அளவான காணியினை பலவந்தமாக பிடித்து அக்காணியில் தற்காலிகமாக தமது கடற்படை முகாமை அமைத்தனர்.
தற்போது அக்காணி விசாலமாக்கப்பட்டுள்ளதோடு சுமார் 3 ஏக்கர் அளவுள்ள காணியை கடற்படையினருக்கு அளந்தெடுப்பதற்கான முயற்சிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த 2013 ஆம் ஆண்டு யூலை மாதமளவில் மேற்குறித்த காணியை நில அளவை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது எமது மக்களிடமிருந்து பாரிய எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
அவற்றை எல்லாம் புறந்தள்ளி அதை அரச வர்த்தமானியில் பிரகடனப்படுத்தி எந்தவித அறிவித்தலும், நஷ்டஈடுகளும் இன்றி தமது இஷ்டத்துக்கு நில அளவையாளர் ஒருவரைக் கொண்டு குறித்த காணியில் சுமார் 3 ஏக்கர் காணியை சுவீகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த காணி அபகரிக்கும் செயற்பாட்டை பேசாலை வெற்றிநாயகி ஆலய மேய்ப்புச்சபையும், பேசாலை மக்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
குறித்த காணி அபகரிப்பு முயற்சியை உடனடியாக கைவிடுமாறும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
மத பீடங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அரசு சுவீகரிப்பது பொருத்தமானதில்லை. இவ்வளவு காலமும் பல்வேறு படைத்தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணி களை மீண்டும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்குவது என்ற தீர்மானத்தில் பல ஏக்கர் காணிகளை மீள உரிமையாளர்களிடம் வழங்கி வருகின்ற இந்த அரசாங்கம் இவ் வேளையில் இக்காணி அபகரிப்பு செய லானது அரசின் தற்போதைய கொள்கைக ளுக்கு முரணானதாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னாரில் காணியை கடற்படையினர் அபகரிக்க முயற்சி...
Reviewed by Author
on
August 08, 2015
Rating:

No comments:
Post a Comment