இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப நல்லதொரு சந்தர்ப்பம்...
தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் தமது தாய்நாட்டிற்கு திரும்பி செல்வதற்கான சரியான சந்தர்ப்பம் ஒன்று உருவாக்கியுள்ளதாக ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் தலைவர் எஸ். சீ. சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கை அகதிகள் இருப் பதுடன் அவர்களில் 60,000 க்கும் அதிக மானோர் இன்னும் அகதி முகாம்களில் வாழ்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவிப்பாளர்களாயின் அதற்கான உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியன தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பு இலங்கை அகதிகள் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் இதுவரை 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருப் பதாகவும் எஸ்.சீ. சந்திராஹாஸன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை அகதிகளில் 3800 பட்டதாரிகள் இருப்பதாகவும் அவர்கள் இலங்கைக்கு பாரிய சொத்தாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப நல்லதொரு சந்தர்ப்பம்...
Reviewed by Author
on
August 31, 2015
Rating:

No comments:
Post a Comment