அண்மைய செய்திகள்

recent
-

எதிர்க்கட்சி தலைவரை ஜனாதிபதி நியமிப்பது ஜனநாயக விரோதம்...


பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி வரிசையில் அமரும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களே எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க வேண்டுமே தவிர ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரை ஜனாதிபதி நியமனம் செய்தால் நாட்டின் பெரும்பாலான கட்சிகளின்ஜனநாயகம் சீர்குலையுமென்றும் அவர் கூறியுள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமது கட்சிக்கு உரித்தானதென உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இப்பதவி வழங்கப்பட வேண்டுமென ஜே.வி.பி. தர்க்கம் புரிகிறது. இது தொடர்பாகவும் விசாரணை வேண்டுமென விமல் வீரவங்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை புதிய எதிர்க்கட்சிக் கூட்டமைப்பை உருவாக்க ஐ.ம.சு. முன்னணியுடன் தொடர்பான பல அரசியற் கட்சிகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

இவ்விடயமாக பல தரப்பினருடன் கருத்துப்பரிமாறல் நடத்தியதாக சமசமாஜக் கட்சித் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்க் கட்சி கூட்டமைப்பை கட்டியெழுப்ப அவதானம் திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.தே.கவும், ஸ்ரீல.சு.கட்சியும் தேசிய அரசை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இருந்தும் முன்னணியின் உறுப்பினர் கள் சிலர் எதிர்க்கட்சியில் அமர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

செப்டெம்பர் 01 ஆம் திகதி முதலாவது பாராளுமன்ற அமர்வில் இணைவாக எதிர்க் கட்சித் தலைவரை ஜனாதிபதி நியமிப் பாரெனத் தெரிகிறது.

எதிர்க்கட்சி தலைவரை ஜனாதிபதி நியமிப்பது ஜனநாயக விரோதம்... Reviewed by Author on August 31, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.