இன்று முதல் கடவுச்சீட்டு பெற கைவிரல் அடையாளம் அவசியம்...
இன்று (10) முதல் கடவுச்சீட்டு பெறும் விண்ணப்ப நடவடிக்கைகளின்போது கைவிரல் அடையாளத்தை வழங்குவது அவசியம் என குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (10) முதல் 16 வயதுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது டிஜிட்டல் புகைப்படத்தையும் விரலடையாளத்தையும் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும். டிஜிட்டல் பகைப்படமானது நாடு பூராகவும் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தில் அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயங்களில் அமைந்துள்ள புகைப்பட நிலையங்களினூடாக சமாப்பிக்கப்படலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அச்சிடப்பட்ட புகைப்படப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விரலடையாளங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படுவதுடன் இதற்காக விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட ரீதியில் திணைக்களத்திற்கு சமூகமளித்தல் வேண்டும். நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் பழைய கடவுச் சீட்டுகளை காலவதியாகும் வரை தொடர்ந்தும் பயன்படுத்தலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் கடவுச்சீட்டு பெற கைவிரல் அடையாளம் அவசியம்...
Reviewed by Author
on
August 10, 2015
Rating:

No comments:
Post a Comment