அண்மைய செய்திகள்

recent
-

புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறவேண்டும்..


புதிய ஆட்­சியில் அமைச்சுப் பத­வி­களை பெற்றுக்கொண்டு தமது மக்­க­ளுக்கு சேவை­யாற்ற தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் முன்­வர வேண்­டு­மென கண்டி மாவட்­டத்தில் வெற்­றி­யீட்­டிய முன்னாள் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

மறைந்த காமினி திஸா­நா­யக்­க­வுக்கு பின்னர் அதி­கப்­ப­டி­யான விருப்பு வாக்­கு­களை தனக்கு பெற்றுக் கொடுத்த வாக்­கா­ளர்­க­ளுக்கு நன்றி தெரி­விப்­ப­தா­கவும் அவர் கூறினார்.

ஐ.தே.கட்­சியின் வெற்றி தொடர்பில் முன்னாள் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

முப்­பது வரு­டங்­க­ளாக தேர்தல் சட்­டங்கள் வெறு­மனே புத்­த­கங்­க­ளுக்குள் மட்­டுமே வரை­ய­றுக்­கப்­பட்­டி­ருந்­தன. எந்­த­வொரு சட்­டமும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. தேர்­தல்கள் நடத்­தப்­பட்­டன. ஆனால் இம்­முறை இடம்­பெற்ற பொதுத் தேர்­தலில் புத்­த­கங்­க­ளுக்குள் வரை­ய­றுக்­கப்­பட்­டி­ருந்த தேர்தல் சட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன.

தேர்­தல்கள் ஆணை­யா­ள­ருக்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டன. சுவ­ரொட்­டிகள், கட்­அ­வுட்கள் அகற்­றப்­பட்டு பொலி­ஸாரும் தமது கட­மை­களை சரி­வரச் செய்­தனர்.
இவ்­வா­றா­னதோர் நல்­லாட்சி சூழ்­நி­லையில் நீதியும் நியா­ய­மு­மான தேர்தல் நடத்­தப்­பட்­டது. இத் தேர்­தலில் மக்கள் மீண்டும் நல்­லாட்­சிக்கு ஆத­ரவு வழங்கி அதனை தொடர்­வ­தற்கு ஆணை வழங்­கி­யுள்­ளனர்.

எனவே ஜனா­தி­பதி மைத்­திரி பால சிறிசேன தலை­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஸ்திர­மான நல்­லாட்சி நாட்டில் அமை­வது உறு­தி­யாகும். இதனால் புதிய நல்­லாட்­சியில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இணைந்து அமைச்சுப் பத­வி­களை பெற்­றுக்­கொண்டு தமது மக்­க­ளுக்கு சேவை­யாற்ற முன்­வர வேண்டும்.
அதனை விடுத்து தொடர்ந்தும் அர­சி­யலில் எல்லைக்கோட்டில் நின்று கொண்­டி­ருக்­காது அர­சுடன் இணைய வேண்டும். ஐ.தே.கட்­சியில் கண்டி மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு மறைந்த காமினி திஸா­நா­யக்க அதிக விருப்புவாக்­கு­களை பெற்றார்.

அதன் பிறகு அதி­கப்­ப­டி­யான விருப்பு வாக்­குகள் இத் தேர்­தலில் எனக்கு கிடைத் துள்ளது. இதற்காக எனக்கு வாக்களித்த ஆதரவு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள் கிறேன்.எதிர்கால நல்லாட்சியில் எனது சேவைகள் தொடரும் என்றார்.
புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறவேண்டும்.. Reviewed by Author on August 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.