25,000 கிராமங்களை இணைத்து 2,500 கொத்தணி கிராமங்கள்...
கிராமிய மட்டத்தில் அதிகாரப் பகிர்வு
‘நாம் ஒருபோதும் பிரபாகரனோடு ஒப்பந்தம் செய்யவோ பிரபாகரனுக்குப் பணம் கொடுக்கவோ முற்பட்டதில்லை” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கிராமிய மட்டத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்து கிராமிய அமைப்புகளுக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பதே எமது அதிகாரப் பகிர்வின் நோக்கம் என குறிப்பிட்ட பிரதமர், அரசியல் வாதிகளுக்கு அந்த அதிகாரம் வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது புலிகளுடனான தொடர்பு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நான் ஒரு போதும் பிரபாகரனோடு ஒப்பந்தம் செய்தவனல்ல. நான் பிரபாகரனுக்கு பணம் கொடுக்கவுமில்லை.
2005 ஜனாதிபதித் தேர்தலின் போது ‘எனது வேண்டுகோளுக்கு இணங்கினால் உங்களை ஜனாதிபதியாக்க முடியும் எனக் கூறிய போதே அதற்கு இணக்கம் தெரிவிக்காத நான் இலகுவான வெற்றி வாய்ப்பு நெருங்கி வரும் போது எதற்காக அவ்வாறு செயற்பட வேண்டும்?
எனினும் நாம் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வோம். அது கிராம மட்ட அதிகாரப்பகிர்வாக அமையும். அதற்கான அதிகாரத்தை நாம் அரசியல்வாதிகளுக்கன்றி கிராமங்களில் உள்ள சாதாரண அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களுக்குமே வழங்குவோம்.
25,000 கிராமங்களை இணைத்து 2500 கொத்தணி கிராமங்கள் அமைக்கப்பட வுள்ளது. பொது அமைப்புகளின் பிரதிநிதி களுக்கே அதன் அதிகாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர்,
நாம் புதிய நாடொன்றைக் கட்டியெ ழுப்பவே ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கியுள்ளோம். இதற்கிணங்க ஜனவரி 8ம் திகதி ஆரம்பித்த புரட்சியை பலப்படுத்துவதே எமது நோக்கம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நாம் இந்த நாட்டை முன்னேற்றுவோம்.
நாடுமுழுவதையும் நோக்கும்போது இன்று மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முற்றாக நிராகரித்துள்ளதைக் காண முடிகின்றது. அவருக்கு பெரும்பான்மை கிடைக்கப் போவதுமில்லை. எனினும் அவர் பகல் கனவு காண்கிறார்.
நல்லாட்சியின் கீழ் நாட்டின் அனைத்து மக்களும் இணைந்துள்ள அமைதியான தேர்தலை இம்முறை பார்க்க முடிகிறது.
1989 பாராளுமன்றத் தேர்தலின்போது நாம் ‘போஸ்டர்’கள் மற்றும் ‘கட்அவுட்’களை வைப்பதற்கு அனுமதித்தோம். அன்றிருந்த நிலமையை கருத்திற் கொண்டே அதைச் செய்தோம். எனினும் அது தொடர்ந்து பழக்கத்துக்கு வந்துவிட்டது. அதற்கென பெருந்தொகை நிதி செலவிடப்பட்டு வருகிறது.
தற்போது ‘போஸ்டர்’, ‘கட்அவுட்’கள் இல்லாத அமைதியான தேர்தலைப் பார்க்க முடிகிறது. இம்முறை தேர்தலில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கிணங்க நல்லாட்சியின் கொள்கை இப்போதே அமுலாகி இருப் பதை நாம் குறிப்பிட முடியும்.
நாட்டு மக்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்து ஊழல் மோசடிகளை நிறுத்தி நிறைவேற்று ஜனாதிபதி முறை அதிகாரத்தை மட்டுப்படுத்தி சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையையும் மேற்கொண்டு விட்டே இந்த தேர்தலில் இறங்கியுள்ளோம்.
இவற்றின் பிரதிபலன்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
இது மக்கள் தேர்தல், இந்த தேர்தலில் யாரைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற தீர்மானம் மக்களுடையதே.
60 மாதங்களில் புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு நாம் முன்வைத் துள்ளோம். நாம் கட்டியெழுப்பும் புதிய நாடு தூய்மையான ஆட்சியை அடிப்ப டையாகக் கொண்டிருக்கும். ஒழுக்கமுள்ள அரசாங்கம் சட்டம் சகலருக்கும் பொது என்பதுடன் இணக்கப்பாட்டுடன் செயற்படும் அரசாங்கமாகவும் இருக்கும்.
நாம் கட்டியெழுப்பும் புதிய நாட்டில் அனைவருக்கும் தொழில்வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.
மக்கள் கைகளில் பணம் புழங்கும் வகையில் அனைவரதும் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு செயற்படும் நாடாக அமையும்.
சுற்றாடலைப் பாதுகாக்கவும் சுதந்திரமாக சிந்தித்து செயற்படவும் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதற்குமான நாடாகவும் அனைவருக்கும் சம உரிமை உள்ள நாடாகவும் அது நிகழும்.
அனைத்து மக்களும் தத்தமது மதங்களை வழிபடக்ககூடிய பூரண சுதந்திரமுள்ள நாடாகவும் பெண்கள் பயமின்றியும் இளைஞர்கள் நாளையைப் பற்றிய நம்பிக்கையை அதிகரித்துக்கொள்ளும் நாடாகவும் அது அமையும்.
ஒரு குடும்பத்தைக் கருத்திற் கொண்டல் லாமல் நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களின் முன்னேற்றம் பற்றி சிந்திக்கும் நாடாகவும் அது அமையும். இத்தகைய நாட்டை நாம் 60 மாதங்களில் கட்டியெழுப்புவோம்.
நாட்டு மக்கள் யானைச் சின்னத்திற்கு வாக்களித்து தமது ஆதரவை வழங்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின் றோம் என்றும் பிரதமர் மேலும் தெரி வித்தார்.
25,000 கிராமங்களை இணைத்து 2,500 கொத்தணி கிராமங்கள்...
Reviewed by Author
on
August 14, 2015
Rating:

No comments:
Post a Comment