வாக்குறுதிகளை நிறைவேற்ற 15,700 மில்லியன் ரூபா திறைசேரி ஒதுக்கீடு...
அரசாங்கம் கடந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு வாக்குறுதியளித்த நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக திறைசேரி 15,700 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புக் கணக்கிற்கு 15 வீத உயர் வட்டி, நெல், தேயிலை, இறப்பர் மற்றும் பசுப்பாலிற்கான நிர்ணய விலைகளைப் பெற்றுக் கொடுத்தல், விவசாய கடன்களில் 50 வீதத்தைக் குறைத்து அறவிடுதல் உள்ளிட்ட நிவாரணங்களுக்காகவே மேற்படி 15,700 மில்லியன் ரூபாவை திறைசேரி உரிய பிரிவுகளுக்கு வழங்கியுள்ளது.
இவ்வருடம் சிறுபோகத்தில் 120,000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்காக திறைசேரி 6000 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இதற்கிணங்க 4000 மில்லியன் ரூபாவை இலக்கை வங்கி மூலமும் 2000 மில்லியன் ரூபாவை மக்கள் வங்கி மூலமும் வழங்கவுள்ளது.
கடந்த வருடத்திலும் இந்த வருடத்திலும் பெரும் போகத்தில் கொள்வனவு செய்யப்படட 160,000 மெற்றிக் தொன் நெல் தற்போது களஞ்சிய சாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. நெல் விலையை நிலையாகப் பேணும் வகையில் இந்த நெல்லை சந்தைக்கு விடும் காலத்தை ஒத்திப்போட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறு தேயிலைத் தோட்ட உரிமை யாளர்களுக்கு தேயிலைக்கு 80 ரூபா நிர்ணய விலையைப் பெற்றுக் கொடுக்கவும் விவசாயிகள் மற்றும் ஏனைய மக்கள் அரச வங்கிகளில் அடகு வைத்துள்ள தங்க நகைகளுக்கு நிவாரணம் வழங்கும் திட்டமும் வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்று வருகிறது.
இது தேயிலை தோட்ட உரிமையாளர்கள் நான்கு இலட்சம் பேர் பயனடையும் வகையில் தேயிலைக்கு 80 ரூபா நிர்ணய விலையைப் பெற்றுக் கொடுப்பதற்காக 5438 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கென வரவு செலவுத் திட்டத்தில் 6300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
50 ஏக்கருக்கு குறைவான இறப்பர் தோட்டங்களை கொண்டுள்ள உரிமையாளர் களின் முதல் தர இறப்பர் கிலோ ஒன்றுக்கு 350 ரூபா நிர்ணய விலையை வழங்குவதற்காக திறைசேரி இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்திற்கு 2300 மில்லியன் ரூபா நிதி வழங்கியுள்ளது. ஏற்கனவே இடைக்கால வரவு செலவு திட்டம் மூலம் அரசாங்கம் 3600 ரூபா நிதியை இதற்கென பெற்றுக் கொடுத்துள்ளது.
மக்களால் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டு இரண்டு இலட்சத்துக்கும் குறைவாக பணம் பெறப்பட்டுள்ள நகைகளுக்கு நகைகளை மீட்பதற்கு வட்டி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் லங்கா புத்ர வங்கிகளில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு இலட்சத்துக்குக் குறைவான விவசாயக் கடன்களுக்கு 50 வீத கழிவைப் பெற்றுக் கொடுக்கவென அரசு வங்கிகளுக்கு 780 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
பொதுவான 32 பயிர்ச் செய்கைககளுக்காக 6 மற்றும் 9 மாத கால குறுகிய கால விவசாய கடன்களை அரச வங்கிகள் வழங்கி வருகின்றன. 58,033 விவசாயிகள் இந்த கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இவர்களின் கடன்களில் 50 வீதம் கழிவு வழங்கப்பட்டது. இதற்கென கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் 2500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்ற 15,700 மில்லியன் ரூபா திறைசேரி ஒதுக்கீடு...
Reviewed by Author
on
August 14, 2015
Rating:

No comments:
Post a Comment