அண்மைய செய்திகள்

recent
-

ஐக்கிய தேசிய கட்சிக்கு 19 அமைச்சு! சுதந்திரக் கட்சிக்கு 16 அமைச்சு!


ஐக்கிய தேசியக் கட்சியின் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 பேருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவிகள் வழங்கப்பட உள்ளன.
இதனடிப்படையில் அமைச்சரவையின் எண்ணிக்கை 35 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

ஹரின் பெர்னாண்டோ, மலிக் சமரவிக்ரம, சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம் ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளது.

கரு ஜயசூரிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட உள்ளார். இதனால், அவரது பெயர் அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே மனோ கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சிக்கு 19 அமைச்சு! சுதந்திரக் கட்சிக்கு 16 அமைச்சு! Reviewed by Author on August 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.