புதிய அமைச்சரவை திங்கட்கிழமை பதவிப் பிரமாணம்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைக்கும் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 24ம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வர்.
ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதுடன் முன்னாள் அமைச்சர்கள் பலரின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவை திங்கட்கிழமை பதவிப் பிரமாணம்
Reviewed by Author
on
August 22, 2015
Rating:

No comments:
Post a Comment