கடும் காற்று : 40 வீடுகள் சேதம்...
நாட்டின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் 40 இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் வீசிய கடும் காற்றினால் 6 வீடுகள் சேதமாகியுள்ளதாகவும் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
பொலன்னறுவை லங்காபுர மற்றும் அனுராதபுரத்தில் வீசிய கடும் காற்றினால் 15 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 150 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், குருநாகல் பொலிபித்திகம பகுதியில் வீசிய கடும் காற்றினால் 20 இற்கும் அதிகமான வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் சில மணித்தியாலங்களில், மத்திய மலைநாடு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் கடுமையான காற்று வீசக்கூடும் என்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் காற்று : 40 வீடுகள் சேதம்...
Reviewed by Author
on
August 16, 2015
Rating:

No comments:
Post a Comment