தேர்தல் விதிகளை மீறிய 1156 முறைப்பாடுகளுக்கு எதிராக வழக்கு...
பொதுத் தேர்தலில் தேர்தல் சட்டவிதிகளை மீறிய 1156 முறைப்பாடுகளுக்கெதிராக தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றம் செல்லவுள்ளார்.
தேர்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பிலான முறைப்பாடுகளுக்காக தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றம் செல்வது இதுதான் முதற் தடவையாகுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார்.
இதன்படி தேர்தல்கள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகளையும் பரிசீலனைசெய்து வருவதாகவும் அவற்றை நீதிபதியிடம் ஒப்ப¨ டக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டுகளில் வேட்பாளர்களும் தற்போது பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களும் அடங்குவர்.
தேர்தல் காலத்தில் சட்டத்தை மீறி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு வழங்கியமைக்காக 214 முறைப்பாடுகளும், போஸ்டர் கட்அவுட்டிற்காக 334 முறைப் பாடுகளும் அரசாங்க சொத்துக்களை முறைகேடாக உபயோகத்திமைக்காக 171 முறைப்பாடுகளும் கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தியமைக்காக 239 முறைப்பாடுகளும் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்துள்ளன.
அதேபோன்று அலுவலக நேரங்களில் அரசாங்க அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டமைக்காக 198 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அமைச்சின் செயலாளர்கள் இருவர், ஒரு உதவிச் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் தேர்தல் விதிமுறை களை மீறியதற்கான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் உயர் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்டால் எதிர்வரும் 07 வருடங்களுக்கு வாக்காளராக பதிவு செய்யப்படமாட்டார்கள் என்பதுடன் வாக்களிக்கவும் முடியாது.
அவர் பாராளுமன்ற உறுப்பினராகும் பட்சத்தில் அவரது பதவி ரத்துச் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் விதிகளை மீறிய 1156 முறைப்பாடுகளுக்கு எதிராக வழக்கு...
Reviewed by Author
on
August 31, 2015
Rating:

No comments:
Post a Comment