அண்மைய செய்திகள்

recent
-

வடபுல முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படும் வரை வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி பேசி பயனில்லை...


மீள்குடியேற்றத்தை த.தே.கூ. துரிதப்படுத்த வேண்டும்

வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த வாழிடங்களில் மீளக்குடியமர்ந்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தேசிய ஐக்கிய அமைப்பின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் வலியுறுத்தியுள்ளார்.

வட மாகாணத்திலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை சொந்த வாழிடங்களில் குடியமர்த்த முன்னர் வடக்கு, கிழக்கு இணைப்பு, குறித்து பேசுவது அர்த்தபூர்வமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் தனிமாகாணம் போன்ற கதைகள் ஜனவரி 8ம் திகதியும் ஆகஸ்ட் 17 ஆம் திகதியும் நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்ட இனவாதம் மீள தலைதூக்கு வதற்கும் துணைபுரிவதாகவே அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹஸனலி விடுத்துள்ள அறிக்கை குறித்து மேற்கண்ட வாறு குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இனவாதமும், மதவாதமும் நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்டு நிராகரிக் கப்பட்டுள்ளது.

அதன் சூடு தணிவதற்குள் ளேயே வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் தனி மாகாணம் குறித்து பேசப்படு கின்றது. இது தூரநோக்கற்ற செயலாகும்.

இச் செயலானது இந்நாட்டில் இனவா தமும், மதவாதமும் மீண்டும் தலை தூக்குவதற்கு உதவும் வகையி லேயே அமையும். இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அணியினரும், பொதுபல சேனா போன்ற மதவாத அமைப்புகளுமே பெரிதும் நன்மை பெறும்.

இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்நாட்டின் நகர்வுகள் குறித்த போதிய தெளிவைப் பெற்றிராதவர்கள் தான் இப்படியான கோரிக்கைகளை முன் வைப்பர்.

அதேநேரம் நாடு குறித்தும் சமூகம் குறித்தும் தூர நோக்கோடு பார்ப்பவர்கள் இவ்வாறான கதைகளை முன்வைக்க மாட்டார்கள். அதற்கான சூழலும் நேரமும் இதுவல்ல.

வடக்கில் காலா காலமாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களை புலிகள் இயக் கத்தினரே பலாத்காரமாக வெளியேற்றினர். அந்த முஸ்லிம்கள் இரண்டு தசாப்தங்கள் கடந்தும் தமது சொந்த வாழிடங்களில் முழுமையாக மீளக் குடியேற முடியாத நிலைமையே தொடர்கின்றது. இப்பிரச் சினைக்குத் தீர்வு காணாமல் வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேசுவது அம் மக்களை நடுத்தெருவில் விடுவதற்கு சமமான செயலாகும்.

அதனால் இம் மக்களைச் சொந்த வாழிடங்களில் மீளக்குடியமர்த்துவதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும்.

அதுவே இன்றைய உடனடி அவசரத் தேவை எனவும் அவர் வலியுறுத்தி யுள்ளார்.

வடபுல முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படும் வரை வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி பேசி பயனில்லை... Reviewed by Author on August 31, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.