கால்களை இழந்த படைவீரருக்கு திருமண விருப்பத்தை காதலியிடம் தெரிவிக்க உதவிய முன்னாள் ஜனாதிபதிகள்...
ஆப்கானிஸ்தானிலான போரின் போது இரு கால்களையும் இழந்த படைவீரர் ஒருவர், இரு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணிகள் முன்பு தனது காதலியிடம் திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்து அவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான எச். டபிள்யூ. புஷ், ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் அவர்களது பாரியார்களான பார்பரா, லோரா முன்னிலையில் ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ உத்தியோகத்தரான ரைலர் ஜெப்றிஸ் தனது காதலியான லோரன் லில்லியிடம் (24 வயது) திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
கென்னபங்போர்ட்டிலுள்ள புஷ் குடும்பத்தினரது கோடை கால விடுமுறை வாசஸ்தலத்திலேயே அவர் இவ்வாறு தனது திருமண விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
காயமடைந்த படைவீரர்கள் தொடர்பான புத்தகமொன்றில் தோன்றியதையடுத்து ஜனாதிபதிகளின் வாசஸ்தலத்துக்கு விஜயம் செய்வதற்கு அன்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த படைவீரர்களில் ரைலரும் ஒருவராவார்.
புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த ரைலர் 2012 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி தனது இரு கால்களின் முழங்காலுக்கு கீழான பகுதியை இழந்திருந்தார்.
இந்நிலையில் இரு முன்னாள் ஜனாதிபதிகளும் ரைலரை அவரது காதலியிடம் திருமணம் செய்வது தொடர்பான விருப்பத்தைத் தெரிவிக்க ஊக்குவித்தனர்.ரைலரின் திருமண விருப்பத்தை அவரது காதலி லோரன் உடனடியாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
கால்களை இழந்த படைவீரருக்கு திருமண விருப்பத்தை காதலியிடம் தெரிவிக்க உதவிய முன்னாள் ஜனாதிபதிகள்...
Reviewed by Author
on
August 14, 2015
Rating:

No comments:
Post a Comment