எங்களுக்கு சங்காதான் பிராட்மன் : இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ்
பிராட்மன் விளையாடி பார்த்ததில்லை. சங்கக்காரவைத்தான் பார்த்திருக்கிறேன் என்று இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் சங்காவைஇ அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசியுள்ளார்.
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான சங்கக்கார தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவிருக்கிறார்.
இந்நிலையில் சங்கா பற்றி மெத்தியூஸ் கூறுகை யில்இ கடந்த 15 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக சிறந்த பங்களிப்பு அளித்த சங்காவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரிடம் இருந்து நாங் கள் ஏராளமான நுணுக்கங்களை கற்றுள்ளோம். அவருடைய கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து எங்களுக்கு கற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறார்.
நான் கிரிக்கெட் ஜாம்பவானான டொன் பிராட் மேனை பார்த்ததில்லை. ஆனால் எளிதான முறை யில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்கக்காரவைத்தான் பார்த்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
எங்களுக்கு சங்காதான் பிராட்மன் : இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ்
Reviewed by Author
on
August 14, 2015
Rating:

No comments:
Post a Comment