அண்மைய செய்திகள்

recent
-

நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து இலட்சியத்தை அடைவதற்கான வழிகளைப் பலப்படுத்துமாறு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

“எமது இலட்சியத்தை அடைவதற்கான வழிகளைப் பலப்படுத்தும் வகையில் தமிழர்கள் ஓரணியில் திரண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்!

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழர்களின் இராஜதந்திர அரசியல் முன்னெடுப்புக்களுக்கு மிகமுக்கியமான தேர்தலாகக் காணப்படுகின்றது.

தமிழ் தேசிய இனத்தின் தாயக விடுதலைப் போராட்டம் கூட்டுச் சதியின் மூலம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.

இருந்தும் தமிழர்களின் தாயகக் கனவும் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் விடுதலைப் போராட்டங்களும் ஓயப் போவதில்லை. ஒடுக்குமுறையாளர்கள் எம்மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்ட இன அழிப்புப் போரினால் எமது சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைப்புக்கள் சீரழிந்துள்ளன.

போராட்ட வடிவங்கள் மாறினாலும் போராட்ட இலட்சியம் ஒருபோதும் மாறப்போவதில்லை. இந்தக் கண்ணோட்டங்களின் அடிப்படையில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழர்கள் ஓரணியாகத் திரண்டு ஒன்றுபட்ட சக்தியாக நின்று தமிழ் தேசியத்தைப் பலப்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே தமது வாக்குக்களை அள்ளி வழங்க வேண்டுமென அன்புரிமையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

சர்வதேச சமூகம் இந்தத் தேர்தலில் தமிழர்களின் ஜனநாயகக் குரலை நாடிபிடித்துப் பார்க்க காத்திருக்கிறது.

தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற அடிப்படையில் வடக்குக்கிழக்கு இணைந்த சமஷ;டித் தீர்வுக்கு வலுச் சேர்க்கவும் தமிழர்களின் ஆழ்மன அபிலாசைகளை வெளிப்படுத்தும் அரசியல் செயல் வழியாக இந்தத் தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டிய காலக் கடமையாகும்.

ஆகவே வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் தேசியத்தைப் பலப்படுத்துவதோடு செயலூக்கமுள்ள கொள்கைப் பற்றுறுதி கொண்ட அரசியல் போராளியான சிவஞானம் சிறீதரனையும் ஆதரித்து உங்கள் முதன்மைத் தெரிவை 10ம் இலக்கத்திற்கு இட்டு அவரையும் வெற்றிபெறச் செய்யவேண்டும் என உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனக் கூறப்பட்டுள்ளது.

Reviewed by Author on August 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.